வெள்ளி, 9 டிசம்பர், 2022

அறநிலையத் துறை தமிழுக்கு அறக்கேடு.........!

 அறநிலையத் துறை தமிழுக்கு அறக்கேடு விளைவிக்கிறதே!(தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 14)- இலக்குவனார் திருவள்ளுவன்

Inbox

thiruvalluvan I

8:14 PM (44 minutes ago)
to "tamilcomputer@tamilcomt.com"aurosun@gmail.comMUTHUbhuvanabhuvi46@gmail.comgunaTamilselvi@catamilacademy.organbuSenthamilkothaisivaVaidehiVijayaவலையகம்GATSarunaPGThiruDevakipasumpon@gmail.comRAJAumarthamizhmozhi247@gmail.com"thangamanit@yahoo.co.in""thanmaanan@gmail.com"Meenakshimohanakrishna@gmail.commuthuvelu_m@yahoo.comdalitpugazh@yahoo.comNirmalameikandan_avvai@yahoo.compuvaneswariRasoolmohideenPVRSramasamykandasamy260@gmail.comnirmalavaradh@gmail.comNirmalaac.chinnappthamizher80Rameshrathinam.chandramohan@gmail.comscsudhakar72@gmail.comsoundaramahadevan@gmail.comsoundarsince83@gmail.comThiruvelanudhaySankardrrramasamy@rediffmail.commalinipridvii@gmail.comamrcts16@gmail.comeeladhesam@hotmail.co.ukbharathbala.anise@gmail.comumadchitra@gmail.comgayatri.m1947@gmail.comtktamilbharathan@gmail.comdr_daniel_jeyaraj@yahoo.compmunuswamy63@gmail.comamritameditech@gmail.comdrseenivasan@gmail.comshanthitssankar@gmail.comkrishnaroy12@yahoo.com

அறநிலையத் துறை தமிழுக்கு அறக்கேடு விளைவிக்கிறதே!(தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 14)- இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல



(நல வாழ்வு மையங்கள் தமிழுக்கு நலம் சேர்க்க வேண்டாவா? (தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 13) தொடர்ச்சி)

அறநிலையத் துறை தமிழுக்கு அறக்கேடு விளைவிக்கிறதே!

(தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 14)

தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறை உருவாக்கப்பட்டு, 01.01.1960 முதல் செயல்பட்டு வருகிறது. அலுவலகங்களில் ஆட்சித்தமிழைச் செயற்படுத்தும் முன்னணித் துறைகளுள் ஒன்றாக இத்துறையும் உள்ளது. இருப்பினும்  முழுமையாக நிறைவேற்ற வேண்டி வாழ்த்துகிறோம். பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்து விட்டு எதற்கு அறக்கேடு என்று கூற வேண்டும என்ற எண்ணம் வருகிறதா? தமிழர்களால் தமிழர்களுக்குக் கட்டப்பட்ட திருக்கோயில்களில் தமிழுக்கு இடமில்லையேஇஃது அறக்கேடுதானே! கோயில்களில் வழிபாடு, சடங்குகள், அழைப்பிதழ்கள் முதலானவற்றில் தமிழ் மட்டுமே நிலைக்க அரசுதான் பெருமுயற்சி எடுக்க வேண்டும். எனவே அறநிலையத்துறையை மட்டும் குறைகூறிப் பயனில்லைதான். எனினும் மக்களிடம் விழிப்புணர்வு பரவவும் தமிழ்ப்பகைவர்களை அடக்கவும் தக்க பரப்புரை மேற்கொள்ளலாம் அல்லவா?

வழக்கமான அலுவலக நடைமுறைகளில் தமிழைப் பயன்படுத்தினாலும் திருக்கோயில்கள் தொடர்பானவற்றில் இப்போதைய கோயில் வழக்காறுகளுக்கேற்ப தமிழ்ச்சொற்களையோ தமிழ்த்தொடர்களையோ காணமுடிவதில்லை.

ஆகமம் என்றும் இல்லாத வழக்கங்கள் என்றும் சொல்லிக் கோயில் பூசாரிகளும் பிராமணீயக் காவலர்களும் தமிழைப் புறக்கணிக்கின்றனர். நீதித்துறையில் உள்ள பிராமணீய ஆதரவாளர்களும் தமிழ் வழிபாட்டைத் தொடர்ந்து நடத்த விடாமல் ஏதோ செய்து வருகின்றனர். இதற்கு முடிவுகட்ட முடியாத இரங்கத்தக்க நிலையில்தான் தமிழ் மக்கள் உள்ளனர் என்பது அறக்கேடுதானே!

தமிழர்களின் கோயில்களில் உள்ள இறைவன்-இறைவிப் பெயர்கள் தமிழாகத்தான் தொடக்கத்தில் இருந்தன. தமிழர்களின் கோயில்களில் தமிழ்க்கடவுள்களுக்கு வேறு எம்மொழியில் பெயர்கள் இருக்கும்? பின்னர்  சிறு கூட்டம் ஒன்று மெல்ல மெல்ல இறைவன்-இறைவிப் பெயர்களைச் சமற்கிருதமயமாக்கி வந்தனர்; வருகின்றனர். சில தமிழ்ப்பெயர்களை மாற்ற முடியாததால், இரு வகையாகவும் குறித்து வருகின்றனர். சமற்கிருதப் பெயர்களுக்கேற்ப இறைவன் இறைவி குறிதத கதைகளை மூடநம்பிக்கைகளைப் பரப்பும் வண்ணம் கூறிப் புராணம் என்றனர்.  தலப் புராணங்கள் என்பன யாவும் உண்மை வரலாற்றை மறைத்துப் பொய்க்கதைகளைப் பரப்புவனதாமே.

கேரளாவில் உள்ள கோயில்களில் கூட இறைவன், இறைவி ஆகியோர் பெயர்கள் தமிழாக உள்ளமையைப் பார்க்கலாம்.  திருச்சூர் மாவட்டம் திருவித்துவக்கோடு கோயில் இறைவன் உய்யவந்த பெருமாள், இறைவி வித்துவக்கோட்டுவல்லி; கோட்டயத்தில் உள்ள திருக்காட்கரை கோயிலில் இறைவன் பெயர் காட்கரையப்பன்; திருமூழிக்களம்(கோட்டயம்) கோயிலில் உள்ள இறைவன் பெயர் திருமூழிக்களத்தான்; கோட்டயம் திருவல்லவாழ் கோயிலில் கோலப்பிரான் – செல்வத்திருக்கொழுந்து; (கோட்டயம்) திருக்கடித்தானம்:அற்புதநாராயணன் – கற்பகவல்லி நாச்சியார்; திருச்செங்குன்றூர் : இமையவரப்பன் – செங்கமலவல்லி; திருப்புலியூர்:  மாயப்பிரான் – பொற்கொடிநாச்சியார்; திருவாறன்விளை:  திருக்குறளப்பன்; திருவண்வண்டூர் : பாம்பணையப்பன் – கமலவல்லி;  எனப் பலவற்றைக் கூறலாம். தமிழ்நாட்டிலுள்ள கோயில்கள் பலவற்றிலும் இவ்வாறுதான் உள்ளன. பல இடங்களில் தமிழ்ப்பெயர்களுடன் சமற்கிருதப் பெயர்களையும் இணைத்தே வழங்கும் பழக்கமும் உள்ளது. ஆனால், தமிழ்ப்பெயர் பரவலாகப் பயன்படுத்தப்படா நிலைதான்.

சான்றாக அருள்மிகு வண்டுசேர் குழலி  உடனாய அருள்மிகு பாம்புரநாதர் திருக்கோயில் > அருள்மிகு சேசபுரீசுவரர் திருக்கோயில்; திருமணிக்கூடம் – மணிக்கூடநாயகன் > வரதாசப் பெருமாள் / கசேந்திரவரதன்; திருமகள் நாச்சியார்-சிரீதேவி; தஞ்சைப் பெருவுடையார் கோயில் (எ) பிரகதீசுவரர் கோவில்; பழமலைநாதர்  (எ) விருத்தகிரிசுவரர்; விருத்தாம்பிகை (எ) பெரிய நாயகி; பாலாம்பிகை (எ) இளைய நாயகி; திருவெண்காடு கோயில்  (எ) சுவேதாரண்யேசுவரர் கோயில் என இரு முறைகளில் குறிப்பிடுவதைக் காணலாம். இவ்வாறு தமிழை ஒரேயடியாக ஒழிக்க முடியாத இடங்கள்  எங்கெங்கும் கடவுளரின் தமிழ்ப்பெயர்களை அகற்றுவதற்காகச் சமற்கிருதப் பெயர்களை இணைத்துப் பரப்பி வருகிறார்கள்..           

2020 சூன் 14 இல் அப்போதைய தமிழ்வளர்ச்சி அமைச்சர் மாஃபா பாண்டியராசன்,  “தமிழகத்தில் சமசுகிருதத்தில் உள்ள கோவில்கள் மற்றும் தெய்வங்களின் பெயரை தமிழில் மாற்ற முதல்வரிடம் ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.  ஆனால் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்று தெரியவில்லை. தமிழ் வழிபாட்டிற்காக நடவடிக்கைகள் எடுத்து வருவைதப் பார்க்கும் பொழுது, இப்போதைய அரசிற்கும் இதே எண்ணம்தான் எனத் தோன்றுகிறது. ஆனால் விரைவாக நடடிக்கை எடுத்துத் தமிழ்நாட்டுக் கோயில்களில் தமிழ்ப்பெயர்களே இருக்க டவடிக்கை எடுக்க வேண்டும்.

மிருத்சங்கர அரணம், அங்குராப்பணம், இசுதானிகர், பூர்ணாஃகூதி தீபாராதனை, சீர்ணோத்தாரண அட்டபந்தன, கும்பாபிசேகம் என்பன போன்ற கோயில் நிகழ்ச்சிகள், சடங்குகள் முதலியவற்றைக் குறிப்பிடும் பொழுது தமிழை விரட்டி விட்டு இடையிலே வந்த ஆரியத்தை வீற்றிருக்கச் செய்துள்ளார்கள். இவற்றை எப்பொழுது நாம் துரத்தப் போகிறோம்?

தமிழ்த்தெய்வங்களைப் புறக்கணிக்கும் போக்கு ஆரியர்களால் உருவாக்கப்பட்டு நிலைத்துவிட்டது. தமிழ்த் தெய்வம் முருகனை  உருத்திரன் மகனாக்கி,  விட்ணுவின் மருமகனாக்கியமை, முருகனின் மனைவியான  வள்ளி குற மகளாததால் அவளை இரண்டாம் மனைவி ஆக்கியமை. முதல் மனைவியாக இந்திரனின் வளர்ப்பு மகளான தெய்வானையை ஆக்கியமை, இடைக்காலத்தில் தமிழ்நாட்டில் நுழைந்த விநாயகரை முருகனின் அண்ணனாக்கியமை,  எனத் தமிழ்கடவுள்களை ஆரிய உறவுடன் பிணைத்து அவ்வுறவுகளை மேம்பட்ட உறவுகளாக ஆக்கியமை பலராலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனினும் நாம் தமிழ் மூலத்தைப் புறக்கணித்து விட்டு ஆரியத் தழுவல்களைக் கட்டிக் கொண்டுள்ளோம்.

தலப் புராணங்கள் என்ற பெயரில் வரலாற்றைச் சிதைத்தும் திரித்தும் மூடநம்பிக்கைகளைப் புகுத்தியும் எழுதப்பட்டவற்றை நீக்கி உண்மையான வரலாற்றை வெளிப்படுத்த வேண்டும். ஒரு சான்று: சீர்காழி தலப் புராணத்தில் சீர்காழி குறித்துப் பல்வேறு கதைகள் கூறப்படுகின்றன. அவற்றில், சீகாளி (சிரீகாளி) சிதம்பரத்தில் நடராசப்பெருமானோடு வாதாடிய குற்றம் நீங்க, வழிபட்டது என்பதும் ஒன்று. ஆனால் உண்மையில் இந்த நகரம் சிறப்பான மூங்கில்கள் விளையும் நகர். காழி என்றால் மூங்கில் எனப் பொருள். எனவேதான் இயற்கையோடியைந்து சீர்காழி என இந்நகர் பெயர் பெற்றது. கோயில் மரமும் மூங்கில்தான். ஆனால், பவளமல்லிகையைக் கோயில் மரமாகக் கூறி வருகின்றனர்.  

மற்றோர் எடுத்துக் காட்டு: மதுரை பழமுதிர்சோலையில் உள்ளது நூபரகங்கை. இதன் பழைய பெயர் சிலம்பாறு. சிலம்பு என்பது ஒலித்தல் என்னும் பொருள் உடையது. எதிரொலிக்கும் மலை சிலம்பு என அழைக்கப்பெற்றது. அத்தகைய மலையில் ஓடும் ஆறு சிலம்பாறு எனப்பட்டது. ஆனால் சிலம்பு என்பதைக் காலில் அணியும் அணிகலனாக எண்ணித், திருமால் காலில் இருந்த சிலம்பு விழுந்த இடம் எனக் கதை கட்டி விட்டனர். காலில் அணியும் சிலம்பிற்கு சமற்கிருதத்தில் நூபுரம் என்று பெயர். எனவே, நூபுர கங்கை எனத் திரித்து விட்டனர். இவ்வாறுதான் ஒவ்வோர் கோயில் வரலாறும் கோயில்களில் உள்ள இடங்களின் வரலாறும் சமற்கிருதமயமாக்கப்பட்டன.

எனவே, அரசு உண்மையான தலப் புராணங்களை எழுதச் செய்ய வேண்டும். இறைவன் இறைவிகளின் தமிழ்ப்பெயர்களையே பயன்படுத்த வேண்டும். தமிழில் மட்டுமே வழிபாடு நடைபெற வேண்டும். தமிழ் வழிபாட்டிற்காக அலைபேசியில் அழைக்கும் முறையை நீக்கிச் சமற்கிருத வழிபாடு வேண்டுமென்பவர்களுக்கு மட்டும் குறிப்பிட்ட நேரங்களில் இத்தகைய வாய்ப்பைத் தரவேண்டும். யாரும் கேட்காமலேயே தமிழ் வழிபாடு மட்டுமே இருக்கும் நிலையை அரசு கொண்டு வரவேண்டும். இவற்றிற்கெல்லாமான நடவடிக்கைகளை அறநிலையத்துறை மேற்கொள்ள வேண்டும்.

அறநிலையத்துறை தமிழறமும் இறையறமும் திகழப் பாடுபடுவதாக!

தெரிந்த இனத்தோடு தேர்ந்துஎண்ணிச் செய்வார்க்கு

அரும்பொருள் யாதொன்றும் இல். (திருவள்ளுவர், திருக்குறள் 462)

– இலக்குவனார் திருவள்ளுவன்

காண்க:

இறைவன்-இறைவியர் தமிழ்ப்பெயர் காக்க அறநிலையத்துறைக்கு வேண்டுகோள்!

தமிழன்பில்லையேல் இறையன்பு கிட்டாது!





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக