சனி, 4 ஜனவரி, 2025

சான்றோர் வாய் (மை) மொழி : 117. அறிவியல் சிந்தனைகள். தொல்தமிழர் – சங்க காலம்.-3.

 

சான்றோர் வாய் (மைமொழி : 117. அறிவியல் சிந்தனைகள். தொல்தமிழர்சங்க காலம்.-3.

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு. குறள். 355.

 

 மக்கள் வாழ்க்கையின் இருபெரும் பிரிவுகள்

1. அகம் :

ஒத்த அன்பான் ஒருவனும் ஒருத்தியும்  கூடிகின்ற காலத்துப் பிறந்த பேரின்பம் அக்கூட்டத்தின் பின்னர் அவ்விருவரும் ஒருவருக்கொருவர் தத்தமக்குப் புலனாக இவ்வாறிருந்ததெனக் கூறப்படாததால் யாண்டும் உள்ளத்துணர்வே நுகர்ந்து இன்பமுறுவதோர் பொருளாதலின் அதனை அகம் என்றார், எனவே, அகத்தே நிகழ்கின்ற இன்பத்திற்கு அகமென்றது ஓர் ஆகுபெயராம்.”

 

2. புறம் என்றதன் பொருளாவது :

” இதனை ஒழித்தன ஒத்த அன்புடையார் தாமேயன்றி எல்லார்க்குத் துய்த்துணரப்படுதலானும் இவை இவ்வாறிருந்ததெனப் பிறர்க்குக் கூறப்படுதலானும் அவை புறமெனவேபடும்.”  என்று உரை வகுத்தார் நச்சினார்க்கினியர்.

 மேற்சுட்டிய அரும்பொருள்கள் வழி அறியப்பெறுவன, பொருள இலக்கணவிளக்கமும் அகம் எம்றதும் புறம் என்றதும் எட்தன்மையன என்று -  உலகம் தட்டை என்ற காலத்துக்கு முன்னும் ; உலகம் உருண்டை என்ற உண்மை என்று அறிந்த காலத்துக்கு முன்னும் ; உலகம் உருவம் பெறாக் காலத்துச் சூரியனின் இயக்க ஆற்றல் அறிந்து, உலகியல் , வாழ்வியல், உளவியல் ஆகிய அறிவியல் ஆகிய  அறிவியல் துறைகள்சார்ந்து, நாடக வழக்கும் உலகியல் வழக்கும் ஆராய்ந்து தொல்காப்பியர் தோர்றுவித்த தொன்மை அறிவியல் கருவூலம் தொல்காப்பியம் என்று அறிக.

அறிவியல் சிந்தனை :

 

முதற் பொருள் “ முதலெனப் படுவது நிலம் பொழுது இரண்டின் ; இயல்பென மொழிப இயல்பு உணர்ந்தோரே. “ தொல்காப்பியம் -4.

 

முதல் எனப்படுவது – நிலம், பொழுது இவ்விரண்டின் இயல்பை உணர்ந்தோர் கூறுவர் என்பதாம்.  நிலத்தொடு பொழுதை (காலம்)  சார்த்திக் கூறியிருப்பது அறிவியல் சிந்தனையாகும்.

காலம் சார்பியலானது என்ற தொல்காப்பியக் கோட்பாடு, ஐஸ்டின்’  கண்டுபிடித்த காலம் சார்பானது என்னும்  சார்பியல் கோட்பாட்டிற்கு  முன்னுரையாக / அடிப்படையாக விளங்குவதக் காணலாம்.

 மேலும்  ஐவகை நிலப்பகுப்பு ;  காலப்பகுப்பு –இறந்த காலம் ;  நிகழ் காலம் ; எதிர்காலம்.  நாள் பகுப்பு  - சூரியன் (பகல், இரவு.)

 

 தொல்தமிழர் பண்பாடு :

தமிழர் பண்பாடு அறிவியல் சிந்தனைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.  தமிழரின் வாழ்வியல் நெறிமுறைகளை முன்னரே சுட்டுயுள்ளேன் இன்றைய அறிவியல் உலகில் , உலகம் போற்றும் உன்னத பழக்க வழக்கங்கள் (பொங்கல் பண்டிகை, சல்லிக்கட்டு, முற்காலத்தில் சிறிய பொற்காசுகளைக் காளையின் கொம்பில்  கட்டிக் களத்தில் விடுவர்.) பலராலும் பாரட்டப்படுவதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.

 

 நமது கடமை :

தொகாப்பியம் சுட்டும் “அகரமுதல் னகர இறுவாய்” எழுத்துக்களிலும் அவ்வெழுத்துக்களால் வார்க்கப்பட்ட சொற்களிலும் அவை புலப்படுத்தும் பொருள்களிலும் பொதிந்துள்ள அரிய அறிவியல் நுட்பங்களைப் பல்துறை வல்லுநர்களோடு கலந்துரையாடித் தொல்காப்பியரின் – தொல்காப்பியர் வழிவந்த சான்றோர் பெருமக்களின் நுண்ணறிவை – அறம் சார்ந்த அறிவியல் அறிவை உலகுக்கு உணர்த்த வேண்டியது தமிழர்தம் கடனாம் என்பதை மறவற்க.

வெள்ளி, 3 ஜனவரி, 2025

சான்றோர் வாய் (மை) மொழி : 116. அறிவியல் சிந்தனைகள். தொல்தமிழர் – சங்க காலம்.-2.

 

சான்றோர் வாய் (மைமொழி : 116. அறிவியல் சிந்தனைகள். தொல்தமிழர்சங்க காலம்.-2.

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு. குறள். 355.

 

தொல்தமிழர்தம் வாழ்வியலில் இறை வழிபாடு :

 மிகப் பழமையான வணக்க முறைகளில் முருகன் வணக்கமும் ஒன்று. குறிஞ்சி நில மக்களின் வழிபாட்டில் முருகன் முதலிடம் பெற்ற இறைவனாவான். இவ்வழிபாடு குறித்து , சங்க இலக்கியங்கள் விரிவாகப் பேசுகின்றன. பின்னர் நிலத்திற்கேற்றவாறு இறைவழிபாடுகள் தோற்றம் பெற்றன.

 

 சங்ககாலம் பொற்காலம் என்றால் அக்கால ஆட்சிமுறையில்  மன்னர் ஆட்சியும் ஆங்காங்கே குறுநில மன்னர்களும் ஆட்சி புரிந்தனர்.  மன்னர்கள் ஆட்சியானாலும் அவர்களை அறவழி ஆட்சிபுரிய  அறிவிற்சிறந்த புலவர் பெருமக்கள் ஆற்றுப்படுத்தினர். மக்கள் வாழ்க்கையும் அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி, என்ற நிலையில் நாடு வளம் பெற்று ஏழ்மையும் வறுமையும் ஒழிய ஈகை குணமுடைய பெருமக்களால்,மக்கள் செம்மையாக வாழ்ந்தனர்.

  

பண்டைத் தமிழர் நாகரிகத்திலும் பண்பாட்டிலும் சிறப்புற்று விளங்கினர்.

இம்மை வாழ்க்கை அல்லது இவ்வுலக வாழ்க்கையில் தான் ஆர்வம் கொண்டிருந்தனர். இவ்வுலக வாழ்கையை உண்மை என்று கருதினார்கள் .  சமுக நீதிக்கு உட்பட்டு இவ்வுலகிலேயே இன்பத்தைத் தேடிப் பெறலாம் என்ற கருத்துகளை ஆற்றுப்படை நூல்களில் காணலாம். தொல்தமிழர்கள் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தனர். இவ்வுலகம் இயற்கையின் ஆக்கமே என்று கண்டனர்.

 

மண் திணிந்த நிலனும்

நிலனேந்திய விசும்பும்

விசும்பு தைவரு வளியும்

வளித் தலைஇய தீயும்

தீமுரணிய நீரும் என்றாங்கு

ஐம்பெரும் பூதத் தியற்கை போல.”

என்று இவ்வுலகம் ஐம்பூதங்களாகிய தனிமங்களால் ஆனது. அஃதாவது ஐந்து தனிமங்களும் ஒன்றிற்கொன்று முரண்பட்டவையாகவும் உறவு உடையதாகவும் விளக்கப்பட்டன. இவ்வைந்து தனிமங்களின் பொதுத் தன்மையே – இயற்கை ஆகும்.

தமிழர் நிலம் ;

மேற்கூறிய இயற்கை இயல் :

 அகத்திணை, புறத்திணை என்றது – வாழ்வியல்

கைக்கிளை முதலாகப் பெருந்திணை வகுத்த ஏழு திணைகளும் – ஒழுக்கவியல்.

முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல்  என வகுத்த  நால்வகையும் – நிலவியல்.

 நகை, அழுகை முதலான எட்டு வகை மெய்ப்பாடுகள் – புனைவியல்.

 மக்கள் வாழ்க்கையின் இருபெரும் பிரிவுகள்

1. அகம் : “ஒத்த அன்பான் ஒருவனும் ஒருத்தியும்…..தொடரும்………………….

 

:

வியாழன், 2 ஜனவரி, 2025

சான்றோர் வாய் (மை) மொழி : 115. அறிவியல் சிந்தனைகள். தொல்தமிழர் – சங்க காலம்.

 

சான்றோர் வாய் (மைமொழி : 115. அறிவியல் சிந்தனைகள். தொல்தமிழர்சங்க காலம்.

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு . குறள். 355.

 

தமிழ், ஓர் இயற்கை மொழி மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இடையறாது தொடர்ந்து வழக்கில் இருந்துவரும் மொழியாகும். உலகின் மிகத் தொன்மையான மொழிகளுள் முதலிடம் வகிக்கும் சிறப்பையும் கொண்டுள்ளது என்பது உலகம் ஒப்புக்கொண்ட உண்மையாகும்.

 

  மேலும் உலக ம் போற்றும் உன்னத இலக்கண இலக்கியங்களைக் கொண்டுள்ள  மொழியாகும். மேற்சுட்டியுள்ள சான்றுகளின் வழித் தமிழ் ஓர் அறிவியல் மொழி என்பதும் உறுதியாகின்றதன்றோ.!

 

 தமிழ் வரலாற்றை ஆராய்ந்த அறிஞர் சிலர் “ சங்க காலம் பொற்காலம் என்றோ, பொதுவுடைமைச் சமுதாயம் என்றோ கூறிவிட முடியாது “ என்று கூறுகின்றனர்.

 “ மதுரைக் காஞ்சி, பட்டினப்பாலை, சிலப்பதிகாரம் போன்ற நூல்கள் செல்வர்கள் நிலையைச் சிறப்பாக எடுத்தியம்ப…..

 

பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, இன்னபிறவும் பழந்தமிழகத்தின் வறுமை நிலையை எடுத்துக்காட்டுகின்றன என்பர்.

 

எனினும்  இலக்கண இலக்கியங்கள் வாழ்வியல் நெறிகளை அறிவியல் நோக்கில் ஆய்ந்து எடுத்தோதும்  சிறப்பினைப் பெற்றுள்ளன என்பதே உண்மை.

  “இனாத அம்ம இவ்வுலகம் ; இனிய காண்க இதன் இயல்புணர்ந்தோரே என்று இவ்வுகம் துன்பம் நிறைந்ததே

சில சான்றுகள் :

இவ்வுலகத்து இயற்கை உணர்ந்தோர் இனிய காண்பதற்கேற்ற நல்ல செயல்களை அறிந்து செய்வாராக என்று புறநானூற்று 194 ஆம் பாடல் கூறுகிறது… மேலும் காண்க :

யாக்கை நிலையாமை – புறநானூறு : 365.

செல்வம் நிலையாமை -           “ – 357, 360, 363.

விருந்து பேணல் – நற்றிணை – 41, 81, 135, 258.

பகிர்ந்து கொடுத்தல் – நற்றிணை – 336.

கற்பு நிலை -                      “ – 397.

மன்னித்தல் -                      “ – 355.

இறைக்கொள்கை – புறநானூறு : 196.

 

 இல்லற வாழ்வில் ஒருவரைவிட்டு ஒருவர் பிரிதலாகிய சந்நியாசம் கோடல் தமிழர் நெறியன்று. இணைந்த இருவரும் இல்லறத்தில் இருந்தபடியே சிறப்படைவதுதான் தமிழர் நெறி.  பிறன்மனை விழைவதோ, பரத்தையை விழைதலோ கூடாது.

…………………. –தொடரும்………………………….