தன்னேரிலாத தமிழ் –396: குறள் கூறும் ”பொருள்” பெறுக.
315
அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்
தம்நோய்போல் போற்றாக் கடை
.
பிற உயிர்கள் படும் துன்பத்தைத் தமக்கு நேர்ந்த துன்பமாகக் கருதி அவ்வுயிர்களைக் காப்பாற்ற முயலவில்லையானால் ஆறறிவு பெற்றதன் பயன்தான் என்ன..?
”எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம் உயிர்போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார் யாவர் அவர் உளந்தான்
சுத்த சித்துருவாய் எம்பெருமான் நடம் புரியும் இடமென நான் தேர்ந்தேன்…”
---வள்ளலார்.
உயிர்கள் அனைத்தும் மண்ணில் வாழப்பிறந்தவையே ; எவ்வுயிரும் தம் உயிர்போல் என்ணிப் போற்றல் நம் கடன். எவ்வுயிர்க்காயினும் இரங்கும் உள்ளம், இறைவன் மகிழ்ந்தினிது உறையும் இடமாகும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக