தன்னேரிலாத தமிழ் –399: குறள் கூறும் ”பொருள்” பெறுக.
341
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.
ஒருவன் யாதொன்றின் மீது பற்றின்றி விலகியிருக்கின்றானோ அவனுக்கு அஃதொன்றால் துன்பம் விளைவதில்லை. பற்றினால் துன்பம் பற்றும்.
துறவுக்கு முதற்பகை ஆசையே.
” ஆசை என்னும் பெருங் காற்றூடு இலவம் பஞ்சு
எனவும் மனது அலையும்
மோசம் வரும்….” தாயுமானவர்.
பெருங்காற்றில்
இலவம் பஞ்சு பறப்பது போல் ஆசையுள்பட்ட மனதும்
பறக்கும் ; ஈன வழிகளில் இழுத்துச் செல்லும் ; இறைவனை அடையவொட்டாது தடுக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக