செவ்வாய், 1 மார்ச், 2022

தன்னேரிலாத தமிழ் –400: குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –400: குறள் கூறும்பொருள்பெறு.

 

350

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு.


முற்றும் பற்றற்றநிலை எய்தியவனின் குறிக்கோளை இறுகப் பற்றிக்கொள்க; பற்றற்ற நிலை எய்த அதுவே சிறந்த வழியாம். பற்று விடலாவது மனம், மொழி, மெய் வழி நிகழும் விருப்பினைத் துறத்தலே.


முப்பெயர் மூன்றும் உடன்கூட்டி ஓரிடத்துத்

தப்பிய பின்றைத் தம்பேர் ஒழித்து அப்பால்

பெறுபெயரைக் காயப் பெறுபவேல் வையத்து

உறும் அவனையெல்லாம் ஒருங்கு.”அறநெறிச்சாரம், 141.


உலகமூடம், தேவ மூடம், பாசண்டி மூடம் ஆகிய மூன்றிலிருந்தும் ஒருசேர விடுபட்டபிறகு., நான் என்னும் ஆணவத்தையும் ஒழித்து, துறவு நிலைக்குப் பின்னர்ப் பெறத் தகுந்ததூயவன்என்னும் புகழ் மொழியையும் வெறுக்கும் நிலையை ஒருவன் பெறுவானாகில் , உலகத்தில் அப்படிப்பட்ட தூய பெரியோனை எல்லாப் பெருமைகளும்  ஒன்றாக அணுகும்.

2 கருத்துகள்: