திங்கள், 7 மார்ச், 2022

தன்னேரிலாத தமிழ் –406: குறள் கூறும் ”பொருள்” பெறுக. மான் விடு தூது…!

 

தன்னேரிலாத தமிழ் –406: குறள் கூறும்பொருள்பெறுக.

மான் விடு தூது…!

கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான்

       குடிக்கத்தான் கற்பித் தானா

இல்லைத்தான் பசியாமல் இருக்கத்தான்

       பதுமத்தான் எழுதினானா

அல்லத் தானென் கலியை வெல்லத்தான்

        நின்னைத்தான் அல்லாமல் தான்

சொல்லத்தான் வேறுமுண்டோ முல்லைத்தாண்

    டவராய சுகிர்த வேளே.”

 

மான் விடு தூது: இந்நூல் மிதிலைப்பட்டியில் வாழ்ந்த குழந்தைக் கவிராயர் என்பவரால் அவர் காலத்தே சிகங்கை சமஸ்தானத்தில் பிரதானியாக இருந்த முல்லையூர்த் தாண்டவராயபிள்ளை யென்னும் வேளாள குலதிலகர் மீது இயற்றப் பெற்றது.

இச்செய்யுளும் சில வேறுபாடுகளுடன் வேறு ஒருவர் இயற்றியதாக வழங்குகின்றது. –டாக்டர் உ.வே.சா. பதிப்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக