தன்னேரிலாத
தமிழ் –417: குறள் கூறும் ”பொருள்” பெறுக
430
அறிவுடையார்
எல்லாம் உடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்.
அறிவுடையார்
எவ்வகையான
செல்வம் இல்லாதவராக
இருந்தாலும்
எல்லாம் உடையவர் ஆவர் ; அறிவிலார்
எல்லாச் செல்வங்களையும்
பெற்றிருந்தாலும்
ஒன்றும் இல்லாதவரே
!
தேடிப் பெறவேண்டிய
அரிய செல்வம் அறிவே என்றறிக.
”தத்தம் நிலைக்கும் குடிமைக்கும் தப்பாமே
ஒத்த
கடப்பாட்டில்
தாள்
ஊன்றி
எய்த்தும்
அறங்கடையில்
செல்லார்
பிறன்பொருளும்
வெஃகார்
புறங்கடையது
ஆகும்
பொருள்.”
–நீதிநெறிவிளக்கம்,
65.
தத்தமக்கு
உரிய தகுதிகளுக்கும்
உயர்குல ஒழுக்கங்களுக்கும்
கேடு நேராமல், உலகத்தோடு
ஒட்டி ஒழுகும் உறுதியை மேற்கொண்டு, தவறியும்
அறநெறிகளினின்றும் விலகிச் செல்லாமல், மாற்றார்
பொருளையும்
விரும்பாமல்
வாழ்பவர்களின்
தலைவாயிலில், செல்வம் தானே வந்தடையும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக