வியாழன், 3 மார்ச், 2022

தன்னேரிலாத தமிழ் –402: குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –402: குறள் கூறும்பொருள்பெறு.


361

அவாஎன்ப எல்லா உயிர்க்கும்எஞ் ஞான்றும்

தவாஅப் பிறப்பீனும் வித்து.


ஆசை, எல்லா உயிர்களுக்கும் எக்காலத்தும்  உயிரில் உறைந்து நின்று பிறவித் துன்பங்களைத்  தருகின்ற வித்து.

உண்பது நாழி உடுப்பது நான்கு முழம்

எண்பது கோடி நினைத்து எண்ணுவனகண் புதைந்த

மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்

சாந்துணையும் சஞ்சலமே தான். “  ---நல்வழி. 2.8

மண்ணில் வாழும்மக்களுக்குத் தேவையானவை உண்பதற்குப் படி அரிசி சோறும் உடுத்திக்கொள்ள நான்கு முழத் துணியுமாகும். ஆனால், மனத்தில் கோடிக் கணக்கில் எண்ணங்களை விளைவித்துக் கழியும் கண்மூடித்தனமான மனித வாழ்க்கையானது, மண்ணால் செய்யப்பட்ட பானை போன்று நிலையில்லாதது. உயிர் வாழ்கின்றவரை வாழ்வானது துன்பம் நிறைந்ததாகவே இருக்கும்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக