தன்னேரிலாத தமிழ் –404: குறள் கூறும் ”பொருள்” பெறுக.
379
நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன்.
நல்வினையால் நன்மை விளைகின்றபொழுது இன்பம் அடைகின்றவர்கள் தீவினையால் தீமை அடைகின்றபொழுது துன்பம் அடைவதேன்..?
”சுட்டிச் சொலப்படும் பேரறிவினார் கண்ணும்
பட்ட இழுக்கம் பலவானால்
பட்ட
பொறியின் வகைய கருமம்
அதனால்
அறிவினை ஊழே அடும்” – பழமொழி, 203.
குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய, மிகுந்த அறிவுடையாரிடத்தும் குற்றங்கள் பல உளவாயினும் அதற்குக் காரணம், அவரோடு பொருந்தியிருக்கின்ற பழவினையின் வழிப்பட்டுவரும் செயல்களே. அதனால், நல்ல அறிவினை முன்செய்த தீவினையே கெடுக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக