செவ்வாய், 15 மார்ச், 2022

தன்னேரிலாத தமிழ் –414: குறள் கூறும் ”பொருள்” பெறுக

 

தன்னேரிலாத தமிழ் –414: குறள் கூறும்பொருள்பெறுக

 

410

விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்

கற்றாரோடு ஏனை யவர்.


சிறந்த நூல்களைக் கற்று, விளங்கிய அறிவோடு  திகழும் கற்றறிந்தாரோடு ஒப்புநோக்கக் கல்வியறிவினால் அறிவை விரிவு செய்யாதார் பகுத்தறிவற்ற விலங்கினத்திற்கு ஒப்பாவர். 


முனிவினும் நல்குவர் மூதறிஞர் உள்ளக்

 கனிவினும் நல்கார் கயவர் ~ நனிவிளைவு இல்

 காயினும் ஆகும் கதலிதான் எட்டி பழுத்து

 ஆயினும் ஆமோ அறை.” ~~ நன்னெறி, 28.


கற்றறிந்த சான்றோர்கள் தாம் வெகுண்டபோதும் வறியோர்க்குக் கொடுத்து உதவுவதை மேற்கொள்வார்கள். ஆனால் தீய குணம் உடையவர்கள் மனத்தால் மகிழ்வு கொண்டிருக்கும் காலத்திலும் பிறருக்குக் கொடுத்து உதவ மாட்டார்கள்.   வாழை முற்றிப் பழுக்காத காயாக இருந்தாலும் உணவாகப் பயன் தரும். ஆனால் காஞ்சிரை (எட்டி - நஞ்சு) பழுத்திருந்தாலும் உண்பதற்குப்  பயன்படுமோ சொல்வாயாக..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக