தன்னேரிலாத
தமிழ் –416: குறள் கூறும் ”பொருள்” பெறுக
425
உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்லது அறிவு.
அறிவு எனப்படுவது,
உலகத்தைத் தன்வயப்படுத்துவதாக அமைதலாம் ; அவ்வாறான ஆற்றலுடைய
அறிவு. மங்குவதும் இல்லை மறைவதும்
இல்லை ; எக்காலத்தும் நிலைத்த தன்மை உடையதாம்.
“
தேவர்குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர்தமிழும் முன்மொழியும்- கோவை
திருவா சகமும்
திருமூலர் சொல்லும்
ஒரு வாசகம்
என்று உணர்.-நல்வழி, 40.
திருவள்ளுவர் அருளிய
திருக்குறளும்
நான் மறைகளின்
கருத்துகளும் சம்பந்தர்,
நாவுக்கரசர், சுந்தரர்,
மாணிக்கவாசகர் ஆகியோர்
அருளிய தேவாரம்,
திருவாசகம், திருக்கோவையார் ஆகிய
இறைநெறி நூல்களும்
திருமூலர் அருளிய
திருமந்திரமும் என
அனைத்தும் ஒப்புயர்வற்ற
ஒரு பொருளையே
உணர்த்துகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக