புதன், 2 மார்ச், 2022

தன்னேரிலாத தமிழ் –401: குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –401: குறள் கூறும்பொருள்பெறு.

 

355

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

 மெய்ப்பொருள் காண்பது அறிவு.


எப்பொருளாயினும் அகத்தானும் புறத்தானும் அஃது எத்தன்மை உடையதாயிருந்தாலும் அப்பொருளின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து அறிவதே  அறிவாம்.


அறிவியலின் அடிப்படை விதி இஃது எனக் கொள்க.

செஞ் ஞாயிற்றுச் செலவும்

அஞ் ஞாயிற்றுப் பரிப்பும்

பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்

வளி திரிதரு திசையும்

வறிது நிலைஇய காயமும் என்று இவை

சென்று அளந்து அறிந்தனர் போல என்றும்

இனைத்து என்போரும் உளரே.... “ -புறநானூறு. 30

 செஞ்ஞாயிற்றினது வீதியும் அஞ்ஞாயிற்றினது இயக்கமும் அவ்வியக்கத்தாற் சூழப்படும் பார் வட்டமும் காற்றியங்கும் திக்கும் ஓர் ஆதாரமின்றித் தானே நிற்கின்ற ஆகாயமும் என்று சொல்லப்பட்ட இவற்றை ஆண்டாண்டுப் போய் அளந்தறிந்தவர்களைப்போல, நாளும் இத்துணையளவை உடையனவென்று சொல்லும் கல்வியையுடையோருமுளர்.”

1 கருத்து: