புதன், 16 மார்ச், 2022

தன்னேரிலாத தமிழ் –415: குறள் கூறும் ”பொருள்” பெறுக

 

தன்னேரிலாத தமிழ் –415: குறள் கூறும்பொருள்பெறுக

 

418

கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால்

தோட்கப் படாத செவி.


அறிவாற்றலை வளர்க்கும் சான்றோர் உரைகளால்  துளைக்கப்படாத செவிகள், நன்றாகக் கேட்கும் திறன் உடையவையேயாயினும் அவை கேளாக் காதுகளேயாம் .

நல்லுரைகளை விரும்பிக் கேட்காத செவிகள், செவிகள் அல்லவே.


நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலம் மிக்க

 நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே நல்லார்

குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு

இணங்கி இருப்பதுவும் நன்று,”  -வாக்குண்டாம், 8.


நற்குணம் உடையவர்களைப் பார்ப்பதும்; அவர்கள் கூறும் நல்ல சொற்களைக் கேட்பதும்; அவர்களுடைய நல்ல குணங்கள் பற்றிப் பேசுவதும்; அவர்களோடு நட்புக் கொள்வதும் நன்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக