புதன், 9 மார்ச், 2022

தன்னேரிலாத தமிழ் –408: குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –408: குறள் கூறும்பொருள்பெறுக.

 

398

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு

எழுமையும் ஏமாப்பு உடைத்து.


ஒரு பிறவியில் ஒருவன் பெற்ற கல்வியறிவு, அவன் தோற்றும் தன் தலைமுறைக்கும் தொடர்ந்துவந்து பாதுகாவலாக அமையும்.


கற்றுத் துறைபோய காதலற்குக் கற்பினாள்

 பெற்றுக் கொடுத்த தலைமகன்போல்முற்றத்

 துறந்தார்க்கு மெய் உணர்வில் தோன்றுவதே இன்பம்

 இறந்த எலாம் துன்பம் அலாது இல்.” – நீதிநெறி விளக்கம், 100.


கற்க வேண்டிய நூல்களையெல்லாம்தெளிவாகக் கற்றுக் கற்றபடி நிற்கும் கணவனுக்கு, அவனுடைய கற்புநெறி பிறழாத மனைவி பெற்றுக் கொடுத்த முதல் மகனைப் போல், எல்லாவகைப் பற்றுக்களையும் முற்றிலும் துறந்த துறவிகளுக்கு, அவர்களுடைய மெய்யுணர்வில் தோன்றுவதே உண்மையான இன்பமாகும்; மற்ற இன்பங்கள் எல்லாம் அவர்களுக்குத் துன்பமேயன்றி வேறில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக