தன்னேரிலாத
தமிழ் –417: குறள் கூறும் ”பொருள்” பெறுக
451
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்.
பெருமை உடையவர்கள்
சிறுமைக்குணம் கொண்டவர்களோடு
சேராது விலகியே
இருப்பார்கள் ; அற்பர்களோ அவர்களையே
தமது சுற்றமாகக் கொள்வார்கள்.
“ பொய்ப் புலன்கள் ஐந்தும் நோய் புல்லியர்பால்
அன்றியே
மெய்ப் புலவர்தம்பால் விளையாவாம் – துப்பின்
சுழற்றுங்கொல் கல் தூணைச் சூறாவளி போய்ச்
சுழற்றும் சிறுபுள் துரும்பு.” --- நன்னெறி, 11.
சுழன்று வீசும்
சூறாவளிக் காற்று, எடை குறைவான பொருள்களையும் வலிமையற்ற தூசுகளையும் கவர்ந்துகொண்டு
செல்லும், அது தன்னுடைய வலிமையினால் கல்லால் ஆன தூணைச் அள்ளிச் செல்ல
இயலாது அதுபோல, மாயையில் உழலும் மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் புலன்கள் ஐந்தும் குறைந்த அறிவு உடையவர்களை மட்டுமே துன்புறுத்தும் தன்மையன. அவை சான்றோர்களிடம் சென்று துன்பங்களை விளைவிக்கும் தன்மையற்றனவாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக