தன்னேரிலாத தமிழ் –405: குறள் கூறும் ”பொருள்” பெறுக.
381
படைகுடி கூழ்அமைச்சு
நட்புஅரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு.
படைவலிமை, நன்மக்கள், நிறைந்தவளம், அறிவிற்சிறந்த
அமைச்சர்கள், நட்பிற்சிறந்த
நல்லுறவு, வலிமையான எல்லைப் பாதுகாப்பு
ஆகிய இவ்வாறும்
நிறைவாகப் பெற்றவன்
அரசருள் ஆண்
சிங்கம் போன்றவன்
ஆவான்.
:” உரவோர் எண்ணினும் மடவோர் எண்ணினும்
பிறர்க்கு நீ வாயின் அல்லது நினக்குப்
பிறர் உவமம் ஆகா ஒரு பெரு வேந்தே” –பதிற்றுப்பத்து, 73.
அறிவுடையோர் எண்ணினாலும் அறிவில்லாதோர்
எண்ணினாலும் பிறர்க்கு நீ, (தகடூரெறிந்த பெருஞ்சேரலிரும்பொறை.)உவமையாகப் பொருந்தினாய் அல்லாமல், நினக்குப் பிறரை உவமையாகக் கூறுவதற்கு இயலாத, ஒப்பற்ற பெருமை உடைய வேந்தனே !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக