தன்னேரிலாத தமிழ் –423: பெண்டிர்க்குரிய குணநலன்கள்..!
பெண்ணிற் சிறந்தாளுக்கு…..
“இனித் தலைமகட்கு நாண், மடம், அச்சம், பயிப்பென்பன
குணம். அவற்றுள், நாணென்பது பெண்டிர்க்கு இயல்பாக உளதொரு தன்மை. மடமென்பது கொளுத்தக்
கொண்டு கொண்டது விடாமை. அச்சமென்பது பெண்மையிற் தான் காணப்படாதோர் பொருள் கண்டவிடத்து அஞ்சுவது. பயிர்ப்பென்பது பயிலாத
பொருட்கண் அருவருத்து நிற்கும் நிலைமை. இந்நான்மையும் புனல் ஓடுவழிப் புல் சாய்ந்தாற்போல
வேட்கையான் மீதூரப்பட்டுச் சாய்ந்து கிடக்கும்.” (கொளுத்தல் – கற்பித்தல்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக