தன்னேரிலாத தமிழ் –3978: குறள் கூறும் ”பொருள்” பெறுக.
324
நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி.
நன்னெறி எனப்படுவது யாதெனின், எந்த உயிரையும் கொல்லக்கூடாது என்னும் உறுதியைக் கொள்கையாகக் கொண்டொழுகுதலே ஆம்.
ஓர் உயிரைக் கொன்று உண்ணல் – அன்பு அகத்து இல்லா உயிர் வாழ்க்கையாம்.
“ நன்றியறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு
இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை….” –ஆசாரக்கோவை, 1.
செய்ந்நன்றி அறிதலும் போற்றாரையும் பொறுத்துக் கொள்ளும் பெருந்தன்மையும்
கனிபோலும் இனிய சொற்களையே பேசுதலும் எவ்வுயிர்க்கும் துன்பம் செய்யாதிருத்தலும் ஆகியன சான்றோர்க்கு
உரிய குணங்களாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக