தமிழமுது –281– தொல்தமிழர் இசை மரபு:141. நீட்சியும் - வீழ்ச்சியும். ஆடல் + பாடல் = கூத்து (நாடகம்)
இசைமரபு - எழுச்சி:
பண்சுமந்த பாடல்கள்.காரைக்காலம்மையார்:
“எனக்கினிய எம்மானை ஈசனையான் என்றும்
மனக்கினிய வைப்பாக வைத்தேன் -எனக்கவனைக்
கொண்டேன் பிரானாகக் கொள்வதுமே இன்புற்றேன்
உண்டோ எனக்கு அரியது ஒன்று.”
எனக்கு இனிய பெருமானே...! உன்னையே பெருஞ்செல்வமாக என்மனதில் என்றும் வைத்துள்ளேன். அப்படித் தங்களை பெருஞ்செல்வமாக வைத்தவுடன் மாறாத இன்பம் பெற்றேன். இனி எனக்கு உலகில் அரிய பொருள் ஏதுமில்லை இனி கவலை ஏது.. கலக்கம் தான் ஏது...? மகிழ்ச்சியே மனதில் குடி கொண்டுவிட்டது. என்று இறைவன் அருளை இன்பமகப் போற்றிப் பாடி மகிழ்கின்றார் அம்மையார்.
தம் உயிரையும் உடலையும் தமிழுக்கே தந்த அம்மையை, காரைக்காலம்மையாரை இறைவனே தம் அம்மையாய்ப் போற்றிய பெருமையை எண்ணி எண்ணி வியக்காமல் இருக்க முடியாது.
“சலம் பூவொடு தூபம் மறந்தறியேன்
தமிழோடு இசைபாடல் மறந்தறியேன் ”
என்று அப்பர் பெருமான் பாடும்போது வழிபாட்டோடு பூசனையோடு பின்னிப் பிணைந்தது அருமைத் தமிழ்மொழி என்பதை உணர முடிகின்றது. நாளும் பொற்காசு கொடுத்து இறைவன் இன்பத்தமிழை விரும்பிக்கேட்டார் என்று பேசும் பெரியபுராணம். .............................தொடரும் ..............................................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக