வெள்ளி, 4 செப்டம்பர், 2026

தொல்தமிழர் வழிபாடுகளும் விழாக்களும் -10. முருகன் மடந்தையொடு வீற்றிருத்தல் :

 தொல்தமிழர் வழிபாடுகளும் விழாக்களும் -10. 

தொல்தமிழர் முருகன் வழிபாடு ; ஆறுபடைவீடுகள்.  

   முனைவர் இரெ. குமரன்: 

              திருமுருகாற்றுப்படை . திருஆவினன்குடி .- 3.  

                      முருகன் மடந்தையொடு வீற்றிருத்தல் :  

                       தாஇல் கொள்கை மடந்தையொடு சிலநாள்

 ஆவினன்குடி அசைதலும் உரியன்..”  நக்கீரர்- 175.

                                குற்றமற்ற அறக் கற்பினையுடைய தெய்வயானையாருடனே சில நாள் திருவாவினன்குடி என்னும் ஊரிலே இருத்தலும் உரியன் முருகன்.”  

                        திருவாவினன்குடி - இப்போது பழனி என வழங்கும் ஊர்; இது சங்கக் காலத்தில்பொதினிஎன்ற பெயருடன் ஆவி என்னும் வேளிர் தலைவனுக்கு உரியதாய் இருந்தது. இதன் அருகில் ஆய்க்குடி என இருக்கும் ஊர்ஆவிகுடிஎன்பதன் மரூஉ. இப்பகுதியைக் கல்வெட்டுக்கள்வையாவி நாடுஎன்று குறிக்கின்றன.  

                                முருகன் புகழைப் பாடுவார் இயல்பு :   

புகை முகந் தன்ன மாசுஇல் தூ உடை    

முகைவாய் அவிழ்ந்த தகைசூழ் ஆகத்து   

செவிநேர்பு வைத்த செய்வுறு திவவின்   

நல்யாழ் நவின்ற நயனுடை நெஞ்சின்   

மென்மொழி மேவலர் இன்நரம்பு உளர.” - நக்கீரர். 138 – 142.  

                   பால் ஆவியன்ன நுண்ணிய ஆடை அணிந்தவர் ; மொட்டலர்ந்த மாலை சூழ்ந்த மார்பினை உடையவர் ; தமது எஃகுச் செவியால் இசையை அளந்து பண்ணுறுத்திய வார்க்கட்டினையுடைய யாழின் இசையிலே பயின்று பயின்று ன்மையுடைத்தாகிய மனம் கொண்டவர் ; எக்காலமும் இனிய மென்மொழியே பேசும் இயல்பினர் ஆகிய பாடுநர், இனிய யாழ் நரம்பினை இயக்க........! 

                        மகளி பலரும் இனிய யாழை மீட்டிப் பாடிக்கொண்டே செல்ல ...... முருகப்பெருமானை இடையறாமல் நினைக்கும் முனிவர்கள் முன்னே செல்ல , அவர்களைப் பின்பற்றிக் கந்தருவரும் அவர்தம் மகளிரும் யாழை மீட்டுக்கொண்ட பின்னால் வர, அவர்களுக்குப் பின்னால் திருமால், சிவபெருமான், இந்திரன் ஆகிய தேவர்கள் தொடர்ந்து செல்கின்றனர். 

......................................தொடரும்..................................  

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக