வியாழன், 6 ஆகஸ்ட், 2026

ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியர்:-58....கரு உருவாகும் காலம்.

 ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியர்:-58.- ஓர் அறிவியல் அறிஞர்  

                         கரு உருவாகும் காலம். 

ஆய்வுரை. முனைவர் இரெ.குமரன் (களப்பாள் குமரன்.)  

 பூப்பின் புறப்பாடு ஈர் ஆறு நாளும்    

நீத்து அகன்று உறையார் என்மனார் புலவர்   

பரத்தையிற் பிரிந்த காலை யான.” (தொ.பொ. கற். 185.)  

                            “ பூப்பினது புறம்பு பன்னிரண்டு நாளும் விட்டு அகன்றுறைவாரல்லர் என்று சொல்லுவர் பரத்தையற் பிரிந்த காலத்து என்றவாறு .  பரத்தையர் சேரியானாயினும் பூத்தோன்றி மூன்று நாள் கழித்த பின்பு பன்னிரண்டு நாளும் நீங்குதல் அறமன்று என்றவாறு, இதனாற் பயன் என்னையெனின் அது கருத் தோன்றுங் காலம் என்க, - இளம்பூரணர். 

 தலைவிக்கு மாதவிலக்குத் தோன்றிய (மூன்று நாள் கழித்த பின்ப) பன்னிரண்டு நாளும் தலைவன் அவளைவிட்டுப் பிரிந்திருத்தல் இல்லை என்று கூறுவர் புலவர். இதனால் யன் என்னை எனின் அது கருத் தோன்றும் காலம் என்க  

                                  இத்தகைய ஓர் அறிவியல் ஆய்வை நிகழ்த்தி மெய்ப்பிக்க எத்தனை ஆண்டு க் காலம் ஆகியிருக்கும் என்பதை எண்ணிப்பாருங்கள். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உடலியல் குறித்த ஆய்வில் தொல்காப்பியரின் அறிவியல் அறிவை ஈண்டுக் காணமுடிகிறது.   

                              தொல்காப்பியர் கூறியவாறு கருத்தோன்றுங் காலமாவது 4ஆம் நாள் முதல் 12 நாள்கள். இக்கணக்கின்படி 15 நாள்கள் ஆகின்றன. மருத்துவ அறிவியலின்படி 8 முதல்19ஆம் நாள்வரை கருத்தோன்றும் காலமாகும்.  இக்கணக்கின்படி 12 நாள்கள் ஆகின்றன. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வரையறுத்த கால அளவு இன்றும் பொருந்தி வருகிறது. கால அளவில் இடம் பெற்றுள்ள சிறு வேறுபாடு உடலியல் வளர்ச்சி, நாடுகளின் தட்ப வெப்ப நிலைகளும் கூடக் காரணமாகலாம். 

                                     அறிவியல் நோக்கு: 

                                         " For women with regular menstrual cycles between 26 – 32 days it is much easier to know that they can get pregnant as early as day 8 of their cycle and as late as day 19 of their cycle and on all the days in between, If they have intercourse often during this time, they have an extremely high probability of getting pregnant. Many women using this family planning method find that as they become more familiar with their cycles, they begin to notice fertility signs such as secretions or light cramping which may help them pinpoint ovulation.”  

Cycle Technologies, 

 5335 Wisconsin Ave., Suite 440,  

Washington, DC 20015.  

 ..........உலகத் தோற்றம்....................................தொடரும்.....................