ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியர்:-56.- ஓர் அறிவியல் அறிஞர்.
”தொல்காப்பியம் புள்ளி: (Dot)
ஆய்வுரை. முனைவர் இரெ.குமரன் (களப்பாள் குமரன்.)
தொல்காப்பியர் முதல் எழுத்துக்களாக உயிர் 12 +மெய் 18 என 30 எழுத்துக்களை வரையறுத்துள்ளார். புள்ளி எழுத்துக்கள் : தொல்காப்பியர், மொழியின் இயல்பான இயக்கத்திற்கு எழுத்துக்களின் தோற்றம் (பிறப்பு) எண்ணிக்கை, இடம், பங்களிப்பு, பொருள் புலப்படுத்தம் ஆகியவற்றை அறிவியல் நோக்கில் நுணுகி ஆராய்ந்து உயிர், மெய் எழுத்துக்களில் புள்ளியை நிலைநிறுத்தி எழுத்துக்களின் எண்ணிக்கை மேலும் மேலும் பெருகாமல் காத்து மொழியை வளப்படுத்தினார்.
புள்ளி (மெய்) முதலெழுத்துக்கள் இரண்டனுள் ஒன்றாக வகுத்துப் புள்ளியிடல் வழி அவ்வெழுத்தின் மதிப்பு (ஒலி அளவு) குறைத்தல் இலக்கணமாக வகுத்துத் தமிழுக்கு அறிவியல் செறிவு நிறைந்த ஆக்கத்தைத் தந்தவர் தொல்காப்பியர். ஐந்து என்ற முழு எண்ணுக்கும் (5) புள்ளி ஐந்து (.5) என்ற எண்ணுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை நோக்குங்கள் ; புள்ளியின்றி இன்றைய கணக்கியல் இயங்காது. தொல்காப்பியர் எழுத்தில் தோற்றுவித்த புள்ளி - அதன் இலக்கணம் - அதன் மதிப்பு- அதன் இயக்கமுறை யாவும் தமிழ் ஓர் அறிவியல் மொழி என்பதை மெய்ப்பித்துள்ளதே.
க - ஒரு மாத்திரை ; க் -½ மாத்திரை இவ்விரண்டு எழுத்துக்களுக்கும் உள்ள வேறுபாடு (5 ; .5 ) இவ்விரண்டு எண்களுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை ஒத்திருக்கின்றதல்லவா ? தொல்காப்பியர் எழுத்தின் தலையில் இட்ட புள்ளி எண்களில் இடப்பக்கம் இடம்பெறுகின்றன அவ்வளவே, இவ்வியக்கமுறை அறிவியல் உலகிற்கு தொல்காப்பியர் வழங்கிய அருங்கொடையன்றோ ! மெய்க்கு ஒலி அள்வு : “மெய்யி னளபே அரையென மொழிப (11) சார்பெழுத்துக்களுக்கும் அரை மாத்திரையே. மகர மெய் ¼ மாதிரை மகரம் உள்ளே புள்ளி பெறும் ; “மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்” -(15) க்,ங், ச் எனவரும் 18 மெய்யும் புள்ளி பெறும் என்றார். உயிர்க் குறில் எ, ஒ. இவ்வெழுத்து இரண்டும் புள்ளி பெறும். ஏ, ஓ நெடில் புள்ளி பெறாது. .எழுத்துக்களின் ஒலி அலவு : குறில் ஐந்தும் - 1 மாத்திரை ; நெடில் ஏழும் 2. மாத்திரை ; மெய் எழுத்துக்கள் ½ மாத்திரை. ; உயிர்மெய் -குறில் - 1. மாத்திரை ; உயிர் மெய் நெடில் - 2.மாத்திரை ; உயிரளபெடை 3 . மாத்திரை கூடுதலுமுண்டு. சார்பெழுத்துக்கள் ½ மாத்திரை ‘ மாத்திரை ஒலி அளவைக்குறிக்கிறது. ...................... சிந்துவெளிக் கணக்கு.............................தொடரும்...........................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக