புதன், 12 ஆகஸ்ட், 2026

ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியர்:-64- ஓரறிவு-- புல், மரம் ஆய்வு:

 ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியர்:-64- ஓர் அறிவியல் அறிஞர்.   

                        உ யிர்களின் தோற்றம் ; ஓரறிவு-- புல், மரம் ஆய்வு:   

ஆய்வுரை. முனைவர் இரெ.குமரன் (களப்பாள் குமரன்.) 

புல், மரம் ஆய்வு:   

                              தொல்காப்பியர் தாவரவியல் ஆய்வில் புல் வகை, மர வகைகளையும் மிகத்தெளிவாக ஆராய்ந்துள்ளார்.  

               “புறக்கா ழனவே புல்லெனப் படுமே.” - தொல்.பொரு. 630. 

                             ஓரறிவு உடையன புறவயிர்ப்பு உடையனவற்றைப் புல் என்று சொல்லுவர் என்றவாறு. -இளம்பூரணர் உரை.புறவயிர்ப்பு பக்க வேர்கள் / சல்லிவேர். 

                “ தோடே மடலே ஓலை என்றா   

                ஏடே இதழே பாளை என்றா    

               ஈர்க்கே குலையே நேர்ந்தன பிறவும்   

                புல்லொடு வருமெனச் சொல்லினர் புலவர். 632.  

                                ”தோடு  முதலாகச் சொல்லப்பட்ட உறுப்பின் பெயரெல்லாம் புல்லாகிய உறுப்பின்கண்ணே வருமென்றவாறு.   இதனானே புறவயிர்ப்பும் உள்வயிர்ப்பும் இல்லாதனவற்றுள் ஒரு சாரான இவ்வகைப்பட்ட உறுப்புப் பெயருடையனவாகி இவையும் புல்லெனப்படுமென்றவாறு. தோடு, மடல், ஓலை, ஏடு, இதழ், பாளை ஈர்க்கு, குலை புல்வகை சார்ந்த உறுப்புகள்.பனை ஓலை, தென்னம் பாளை போன்றவை. 

அவையாவன : வாழை, ஈந்து, தாமரை, கழுநீர் என்ற தொடக்கத்தன.  

                          “அகக்கா ழனவே மரமெனப் படுமே.” -632.  உள்வயிர்ப்பு உடையனவற்றை மரம் எனப்படும் என்றவாறு. உள் வயிர்ப்பு (வைரம்)    

..... “அகக்கா ழனவே மரமெனப் படுமே.”-632.......தொடரும்.................. 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக