ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியர்:-60.- ஓர் அறிவியல் அறிஞர்.
உ யிர்களின் தோற்றம்
ஆய்வுரை. முனைவர் இரெ.குமரன் (களப்பாள் குமரன்.) உலகத் தோற்றம் குறித்து ஆராய்ந்த சான்றோர், உயிர்களின் தோர்றம் குறித்தும் தம் சிந்தனைகளை வெளியிட்டுள்ளனர். உயிரற்றவையிலிருந்து உயிர்கள் தோன்றுகின்றன என்பர் சமணர்.
கி.மு. 4ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அறிவியலின் தந்தை உயிர்த்தோற்றம் குறித்து ஆராய்ந்துள்ளார். அவர் குரங்குகள் மனிதனுக்கும் விலங்குகளுக்கும் இடைப்பட்டவை ; ஆனால் எந்த இடத்தில் இந்த மாற்றம் நிகழ்கிறது என்பதை வரையறுத்துச் சொல்ல முடியவில்லை என்கிறார்.
கி.மு. 450இல் வாழ்ந்த எம்பெடோகிளஸ் என்ற கிரேக்க விஞ்ஞானி மண்ணிலே தோன்றும் உயிர்கள் தாவரங்களையும் விலங்குகளையும் தோற்றுவிக்கின்றன. ; இவற்றுள் தகுதி உள்ளவையே வாழ்கின்றன. என்றார். இவரே பரிணாம வளர்ச்சிக்கொள்கையின் தந்தை என்று போற்றப்படுகின்றார்.
கி.மு 6ஆம் நூற்றாண்டில் இந்திய மருத்துவத்தில் தலைசிறந்து விளங்கிய சரகர், சுஸ்ருதர் உயிர்களை நான்காகப் பகுத்தனர். தொல்காப்பியர் உயிர்களின் பரிணாம வளர்ச்சியினைச் சுட்டுகின்றார். இப்பகுப்புமுறை புலனறிவு அடிப்படையில் அமைந்துள்ளது .இன்றைய அறிவியல் கொள்கையோடு பெரிதும் ஒத்துள்ளதை அறிய முடிகிறது. - காண்க. நூற்பா (தொல்.பொரு. 1526.)
தொல்காப்பியர் உயிர்களின் தோற்றமாவது புல், பூண்டிலிருந்து தோற்றம்பெற்று பரிணாம வளர்ச்சியடைந்தவை என்ற அரிய அறியல் கருத்தை முன்வைக்கிறார்.
உலக அறிவியல் வல்லுநர்களின் ஆய்வின்படி முதலில் தோன்றிய உயிர் பாக்டீரியா எனப்படும் பூஞ்சை.
இவ்வரலாற்றில் தொல்காப்பியரின் உயிர்களின் தோற்றவரையறை,
ஒன்றறி வதுவே உற்றறி வதுவே--------(புல், மரம், முதலிய இவ்வினம் -தொடு உணர்வு)
இரண்டறிவதுவே அதனொடு நாவே --- ((நத்தை, சிப்பி, முதலிய இவ்வினம் -தொடு உணர்வோடு சுவை உணர்வும்)
........................தொடரும் ..............................மூன்றறி வதுவே................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக