திங்கள், 26 செப்டம்பர், 2011

சங்க இலக்கியச் செய்திகள் -3

தமவும் பிறவும் ஒப்ப நாடி
கொள்வதூஉம் மிகை கொளாது
கொடுப்பதூஉம் குறை கொடாஅது
பல் பண்டம் பகர்ந்து வீசும்
............................................ (ப.பாலை:209-212
வணிகர்கள், தம்முடைய பொருளையும் பிறருடைய பொருளையும் ஒப்பவே கருதி வாங்கிக் கொள்வதையும் அதிகமாகக் கொள்ளாமல் கொடுப்பதையும் குறைத்துக் கொடுக்காமல் பல பண்டங்களையும்  நேர்மையாக விலை கூறி விற்பர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக