வியாழன், 29 செப்டம்பர், 2011

தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம்..

தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் ஆவணியா, சித்திரையா, ,தையா..?தொல்காப்பியர் காலத்தில் ஆவணித் திங்களே ஆண்டின் தொடக்கமாக இருந்தது.இது குறித்து அறிஞர் சாமி.சிதம்பரனார் “ ஆவணியும் புரட்டாசியும் கார்காலம், தொல்காப்பியர் கார்காலத்தையே முதலில் கூறியுள்ளார்.
காரும் மாலையும் முல்லை-குறிஞ்சி
கூதிர் யாமம் என்மனார் புலவர் (தொல்.பொரு.அகம்.6)
ஒரு காலத்திலே ஆண்டின் முதல் மாதம் ஆவணியாகவும் இறுதி மாதம் ஆடியாகவும் வைத்து எண்ணப்பட்டு வந்தது இதனை “ காலவுரிமை யெய்திய ஞாயிற்றுக்குரிய சிங்கவோரை முதலாகத் தண்மதிக்குரிய கற்கடகவோரையீறாக வந்து முடியுந்துணை ஓர் யாண்டாமாதலின், அதனை இம்முறையானே அறுவகைப்படுத்த இரண்டு திங்கள் ஒரு கால மாக்கினர்” என்று நச்சினார்க்கினியர் மேலே காட்டிய சூத்திரத்தின் உரையிலே குறிப்பிட்டுள்ளார். சிங்க ஓரை- ஆவணி மாதம். கற்கடக ஓரை - ஆடி மாதம்.
பிற்காலத்திலேதான்  சித்திரையை முதல் மாதமாக வைத்து எண்ணினர். ஆவணி முதல் மாதமாக இருந்த காலம் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னமாகும். இவ்வாறு வானநூல் ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்
தொல்காப்பியத்தில் கார்காலம் முதலில் கூறப்பட்டிருக்கின்றது ஆதலால் இந்நூல் ஆவணி மாதத்தை ஆண்டின் முதல் மாதமாக வழங்கிய காலத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும்.இதுவே தொல்காப்பியம் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது என்போர் காட்டும் காரணமாகும்.... தொடரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக