வியாழன், 22 செப்டம்பர், 2011

சங்க இலக்கியச் செய்திகள்

காமம் காமம் என்ப காமம்
அணங்கும் பிணியும் அன்றே நுணங்கிக்
கடுத்தலும் தணிதலும் இன்றே யானை

குளகுமென்று ஆள்மதம் போலப்
 பாணியும் உடைத்து அது காணுநர்ப் பெறினே
----- மிளைப் பெருங் கந்தன்,குறுந்.136 
உரை:  காமம் காமம் என்று இழிவுடைய பொருள் போல் பேசுவர். காமம் வருத்தும் நோய் அன்று , சிறுத்தும் பெருத்தும்  தணிந்தும் அமைவதும் இல்லை. யானை குளகு என்னும் தழை உணவை உண்டு மதத்தை ஆள்கின்ற  தன்மையும் உண்டு. அதைக் காட்சியால் அறிகின்றவர்கள் அறிவர்.

குளகு என்ன வகை இலை / மூலிகை / தழை, உங்களுக்குத் தெரியுமா ?


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக