வியாழன், 24 செப்டம்பர், 2026

தொல்தமிழர் வழிபாடுகளும் விழாக்களும் -22. கொற்றவை வழிபாடு :

  தொல்தமிழர் வழிபாடுகளும் விழாக்களும் -22. 

  முனைவர் இரெ. குமரன்: 

தொல்தமிழர் - வழிபாடு : 

நெடுநல் வாடை : கொற்றவை வழிபாடு :  

 “நள்ளென் யாமத்தும் பள்ளி கொள்ளான்   

சிலரொடு திரிதரும் வேந்தன்   

பலரொடு முரணிய பாசறைத் தொழிலே.”  - 186 – 188.  

                     அரசன் நள் என்னும் ஓசையுடைய நடு யாமத்தும், உறங்கச் செல்லாமல், சில வீரர்களுடன் பாசறையில் புண்பட்டோரின் வருத்தத்தைப் போக்குவதற்காகத் திரிந்த வண்ணம் இருந்தான்.  

                      சேரன், சோழன், திதியன், எழினி, எருமையூரன், இருங்கோ வேண்மான், பொருநன் எனும் எழுவருடன் மாறுபட்டுப் பாசறைக்கண் தங்கி, அரசன் செய்யும் போர்த்தொழிலில் அவனுக்கு வெற்றியைத் தந்து இப்பொழுதே முற்றுப் பெறுவதாக என்று செவிலித்தாய் கொற்றவையை வழிபட்டு வேண்டினாள்.  

                 அரசமாதேவிக்குப் பிரிவாற்றாமையைத் தந்த நெடிய வாடை, அரசனுக்குப் பாசறைத் தொழிலில் ஊக்கத்தை மிகுவித்ததால் நல்ல வாடையாயிற்று.  

 .........................தொடரும்.............................................  

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக