திங்கள், 7 ஜூன், 2021

 

தன்னேரிலாத தமிழ் -272.

556

மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்

மன்னாவாம் மன்னர்க்கு ஒளி.


மன்னர்க்கு நிலைத்த புகழைத் தருவது, மக்களுக்கு நல்லாட்சி நல்கும் செங்கோலே ; செங்கோல் கொடுங்கோலானால் மன்னர்க்கு  வாழுங்காலத்தேயும்  புகழ் இல்லையாம்.


மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்

 தம் புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே~~ புறநானூறு, 165.


நிலையில்லாத இவ்வுலகத்தில் நிலைபெற விரும்பியோர் . தம் புகழை நிலைநிறுத்தித் தாம் மாய்ந்தனரே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக