தன்னேரிலாத தமிழ் -276.
560
ஆபயன் குன்றும் அறுதொழிலோர்
நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.
மன்னன், மக்களைக்
காக்கத் தவறுவானாயின் நாட்டில்
பசுக்கள்
பால்தரா, ஆறுவகைப்பட்ட
தொழில்களைச்
செய்வோர்
தாம் கற்றவற்றை
மறந்துவிடுவர். (வேறு தொழில் நாடிச் செல்வர்.)
”கொடுங்கோன் மன்னர் வாழும் நாட்டின்
கடும்புலி
வாழும்
காடு
நன்றே.”
---வெற்றிவேற்கை, 63.
கொடுங்கோலன்
ஆளும் நாட்டைவிடக்
கொடுமையான
புலிகள் வாழும் காடு நன்றே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக