திங்கள், 31 மார்ச், 2025

சான்றோர் வாய் (மை) மொழி : 185–அறிவியல் சிந்தனைகள்: ஜான் ஸ்காட் – (John the Scot –கி.பி. 800 -877.)

 

சான்றோர் வாய் (மைமொழி : 185–அறிவியல் சிந்தனைகள்: ஜான் ஸ்காட் – (John the Scot –கி.பி. 800 -877.)

பிரான்சு பேரரசர் சார்லஸ் ஆதரவுடன் அறிவுப்பணியாற்றியவர்.

“ இறைவன் ஆற்றலை முழுமையாக அறிந்திடும் திறன் மனித மனத்திற்கு இல்லை. இறைவனின் இயல்புகளை முழுமையாக உரைத்திட மனிதனால் ஆக்கப்பட்ட மொழிகளும் துணையாக, ”கடவுள் ஒருவர் என்பதே அறிவார்ந்த உண்மை.”

நல்லவர் கெட்டவர் எனப்படும் அனைவருக்கும் தந்தையாய் விளங்கும் இறைவன், எல்லார்க்கும் பொதுவாக இப்பிரபஞ்சம் என்னும் பேரழகு மாளிகையை அமைத்துள்ளார். இம்மாளிகையில் நல்லன செய்து இன்புறுவதும் அல்லன செய்து இன்பத்தை இழப்பதும் அவரவர் மனத்தைப் பொறுத்தது. இறைமையில் கலந்து தன்னை இழப்பதே மனித வாழ்வின் முற்றிய நிலை – முக்திநிலை.

கிறித்துவச் சமயத்தில் அறிவுக்கு ஒவ்வாத கருத்துகளைச் சாடுகிறார்.

 இயற்கையின் பகுபுப்பற்றிப் “பெரிஃபிசியான்” என்னும் நூலில் நான்கு பிரிவுகள்….

1.)     தான் பிறிதொன்றால் படைக்கப்படாமல் பிறவற்றையெல்லாம் படைத்துக்கொண்டிருக்கும் மூலப் பொருள் – கடவுள்.

2.)     பிறிதொன்றால் படைக்கப்பட்டும் பிறவற்றைப் படைத்துக்கொண்டும் இருக்கும் பொருள்கள்.

3.)     பிறவற்றால் படைக்கப்பட்டும் பிறவற்றைப் படைக்கும் ஆற்றல் அற்றவையுமான பொருள்கள்.

4.)     பிறிதொன்றால் படைக்கப்படாமலும்  பிறவற்றைப் படைக்காமலும் இருக்கும் பொருள்கள்.

இயற்கை வட்டத்தில் தோற்றம் முடிவு (முதலும் முடிவும்) கடவுள். நான்கு பிரிவுகளும் ஒன்றையொன்று பற்றித் தொடர்ந்து இயற்கை ஒரு முழுமையாகவே இயங்குகிறது. என்று கூறுகின்றார்.

……………………..தொடரும்………………………..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக