சான்றோர் வாய் (மை) மொழி :
186–அறிவியல் சிந்தனைகள் :இடைக்காலம் – சமயச் செல்வாக்கு,
இடைக்காலம் சமயச் செல்வாக்கு உயர்ந்த நிலையில்– சிந்தனையாளர்கள் சமயம் சார்ந்திருந்தனர்
- சமய நிறுவனங்கள் செல்வச் செழிப்பில் மிதந்தன - சமயக் குருமார்களின் சுகபோக வாழ்வு – மக்களை அரசும்
சமயமும் அடிமைப்படுத்தின,சுரண்டின – அரசு சமயத்திற்கு அடிபணிந்தது - இடைக்காலத் தத்துவம் கிறித்துவ சமயத்திற்குக் குற்றேவல்
செய்துகொண்டிருந்தது –
அரசு + சமயம் = இரு சம்மட்டிகள் – மக்கள் அடிபட்டு அறிவையும் பொருளையும்
இழந்தனர்.
தத்துவக் கல்வி – சமயக் கல்வியாக மாறியது – சமுகத்தில் மேல்மட்ட
மக்கள் மட்டும் கல்வி பெற்றனர் – மக்கள் அறியாமையால் கடவுளுக்கு அஞ்சி அடிமையாகக் கிடந்தனர்
– மக்கள் பலவழிகளில் சுரண்டப்பட்டனர்.
அரசுக்கும் சமயத்திற்கும் கடும் போட்டி - மன்னன் பெரியவனா..? போப்பாண்டவர் பெரியவரா..? –
பூசல் வலுத்தது – 10ஆம் நூற்றாண்டில் பூசல் உச்சக் கட்டத்தை அடைந்தது.
11ஆம் நூற்றாண்டிற்குப்
பிறகு ரோஸலின். ஆன்செலம் முதலிய சமயச் சார்புடைய சிந்தனையாளர்கள் தோன்றினர். சமயம்
தழைக்கச் சிந்தித்தனர் – பண்டைய கிரேக்கத் தத்துவங்களுக்குச் சமயச் சாயம் பூசப்பட்டது.
ரோசலின் – Roscelin – கி,பி. 1050 – 1122. ……தொடரும்…
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக