ஞாயிறு, 20 ஏப்ரல், 2025

தமிழமுது -6 - தாய்மொழி வழிக் கல்வி.

 

தமிழமுது -6   - தாய்மொழி வழிக் கல்வி.

கமால்பாட்சா: தொடர்ச்சி.

மதக் கோட்படுகள், தொழுகைகள், தொழுகை அமைப்புகள், வழிபாடுகள் அனைத்தும் அரபியில் இருந்தன. கமாலின் துருக்கி மொழி திருத்தத்தில்  குரானும் விட்டுவைக்கப்படவில்லை. குரானே துருக்கி மொழியில் பெயர்க்கப்பட்டது.  தொழுகைகளும் தொழுகை அழைப்புகளும் மத போதனைகளும் வழிபாடுகளும் மற்ற மத நடவடிக்கைகளும் துருக்கி மொழியிலேயே நடைபெற வேண்டுமென விதிக்கப்பட்டன.  எதிர்ப்புகள் கிளம்பின ஆனால், கமால் அவற்றை மிகக் கடுமையாக அடக்கிவிட்டார்.” – (கு.. ஆனந்தன்.)

சுவாமி விவேகானந்தர் :- 1863 – 1902.

கல்வி மனிதனுக்குள்ளே அடங்கிக் கிடக்கும் பூரணத்துவத்தை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும். என்றார்.  மூளையில் பல விசயங்களைத் திணித்தல் கல்வியாகாது. கற்கும் கருத்துகள் உள்ளத்தோடு ஒன்றி அதன் மயமாகிப் புத்துயிரூட்டி மனிதத் தன்மையை மலரச்செய்து ஒழுக்கத்தைத் திருத்தி அமைப்பவனாய் இருத்தல் வேண்டும். அதாவது கசடறக் கற்றலும், கற்றபின் அதற்குத் தக நிற்றலும் வேண்டும்.  இதுவே போதனாமுறையின் இலட்சியமாதல் வேண்டும். கல்வி கற்பிக்கும் ஆசிரியரும் கற்கும் மாணவரும் கல்விச் சாலைகளும் இந்த இலட்சியத்திற்கு ஏற்றவாறு அமைதல் வேண்டும். ஊரெங்கும் நாடெங்கும் ஆண்களும் பெண்களும் கல்வியறிவு பெற்று உலக வாழ்க்கையை வளம் பெற நடத்தும் ஆற்றல் பெற வேண்டும். குருகுல முறையிலே தாய்மொழி வாயிலாக உலகியற் கல்வியையும் ஞான வாழ்விற்குரிய கல்வியையும்  ஒருங்கே போதித்தல் வேண்டும்  என்று கல்வியறிவு பெறுவதற்கான வழிமுறைகளைக் குறித்துள்ளார்.

……………….தொடரும்……………………………..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக