சான்றோர் வாய் (மை) மொழி :
190–அறிவியல் சிந்தனைகள்: இக்காலச் சிந்தனைகள்.
இலக்கியப் புரட்சி :
புது யுகத்தின் முதல்
குரல் இத்தாலியில்தான் ஒலித்தது. இங்கு ஒரு இலக்கியப் புரட்சியைத் தோற்றுவித்தவர் “பொக்காசியோ” –கி.பி. 1313 – 1375. இவர் எழுதிய
’டெக்கமரான்’ கதைத்தொகுப்பு எழுச்சியை ஏற்படுத்தியது. மனவுணர்வுகள், உணர்ச்சிப் பிறழ்வுகள்,
இன்ப வேட்கை, சமய எதிர்ப்பு, உலகியல் வாழ்க்கையில் ஈடுபாடு ஆகியன மையக் கருத்துகள்.
கலைப் புரட்சி :
லியனார்டோ டாவின்சி – 1452 – 1519. இவர் அறிவுக்குப்
பொருந்தாத கலைகளை வெறுத்தார். இயற்கைக்கும் அறிவியலுக்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்தினார்.
இவர் ஓவியங்கள் வர்ஜின் ஆஃப் தி ராக்ஸ், லாஸ்ட் சப்பர், மோனோலிசா இவை மூன்றும் சிறந்ததென்பர்.
ஆயிரம் ஆண்டுகளாக ஒரே திசையிலும் ஒரே பாதையிலும் ஓடிய
சிந்தனையை மடை மாற்றம் செய்து புதிய பாதை காட்டிய பெருமை 16ஆம் நூற்றாண்டு அறிஞர்களையே
சாரும். இது மனித வாழ்வின் நாகரிகத்தை மாற்றியது ; அறிவியல் வளர்ச்சிக்கு உதவியது.
அறிவியல் புரட்சி:
……………………………….தொடரும் …………………..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக