வியாழன், 17 ஏப்ரல், 2025

தமிழமுது -4 - தாய்மொழி வழிக் கல்வி.

 

தமிழமுது -4   - தாய்மொழி வழிக் கல்வி.

இந்தியா விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் கடந்தபிறகும் சமுக் மாற்றத்திற்குத் தேவையான கல்விக்கொள்கை வகுகக்ப்படவில்லை. விடுதலை பெற்ற பல நாடுகள் அடிமைச் சமுதாயத்திலிருந்த கல்வி முறையைத் தூக்கி எறிந்துவிட்டன. புதிய கல்வித் திட்டங்களால் முன்னேறிய நாடுகள் தங்கள் தாய்மொழி வழியே கல்வி புகட்டியதால் மாபெரும் சமுதாய மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் அடைந்தன.

மொழி:

மொழி என்பது மனிதகுல மெய்யறிவின் பொக்கிசங்களைப் பாதுகாத்து மரபு வழியாக அளித்துச் செழுமைப்படுத்தவல்ல மதிப்புமிக்க சாதனமாகும்என்கிறார் லெனின்.

கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளவும் நாடு முன்னேற்றமடைய ஒன்றிணைந்து உழைக்கவும் கலை, அறிவியல் செல்வங்களைக் கற்றுணர்ந்து ஆக்கப்பணிகளில் மக்கள் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளவும் உறுதுணையாக இருப்பது மொழியே.. மொழிவழி உணர்வும் உணர்வில் அறிவு விழைவும் அறிவு விழைவில் இயற்கையை வெல்லும் ஆற்றலும் அவ்வாற்றல்வழி மாற்றங்களை நிகழ்த்தலும் இடையறாது நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

தாய்மொழி:

மனிதன் சிந்திக்கத் தெரிந்தவன், சிந்திக்கும் திறன் தாய்மொழிவழியே நிகழ்கிறது. எனவேதான், தாய்மொழிவழிக் கல்வியறிவு பெறவேண்டுவது இன்றியமையாததாகின்றது..

குழந்தையின் உடல் வளர்ச்சிக்குத் தாய்ப்பால் எவ்வளவு இன்றியமையாததோ அவ்வளவு இன்றியமையாதது மனிதனின் மனவளர்ச்சிக்குத் தாய்மொழி. குழந்தை தனது முதல் பாடத்தைக் கற்பது தாயிடமிருந்துதானே..! ஆகவே, குழந்தையின் மன வளர்ச்சிக்குத் தாய்மொழியன்றி வேறொரு மொழியை அவர்கள் மீது திணிப்பது தாய்நாட்டுக்குச் செய்யும் மிகப்பெரிய பாவம் என்றே நான் நினைக்கிறேன்.” என்றார் காந்தியடிகள். …………………தொடரும்…………………

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக