தமிழமுது -13
- தாய்மொழி வழிக் கல்வி.
.என்னுரை- முனைவர் இரெ. குமரன்.
இந்தியாவில் அனைத்துக் கல்வியாளர்களும்…
உலக க் கலவியாளர்களும் ஒரே குரலில் ஓங்கி ஒலிப்பது தாய்மொழி வழிக் கல்வியைத்தான்.
ஒரு நாட்டின், ஓர் இனத்தின் ஒரு புதிய சமுதயத்தின்
எழுச்சி முழக்கமாக இருக்கவேண்டிய தாய்த்தமிழ்
அரசியல்வாதிகளின் தேர்தல் வாக்கு மொழியாகி வெற்றி அறுவடைக்குரிய கருவியாக மாறிவிட்டது.
இந்நிலை மாறினால்தான் தாய்மொழி தனக்குரிய இடத்தில் அமரமுடியும் அதற்கு……
“தழாய்ந்த தமிழந்தான்
தமிழ்நாட்டின் முதலமைசராய்
வருதல் வேண்டும்” என்கிறார் பாவேந்தர்.
தாய்மொழி: இஃது ஓர் இனத்தின் முகவரி ; தமிழ்தான்
தமிழனின் முகவரி. பிழைப்புக்காகப் பேசும் மொழி
வாழ்க்கை மொழியாகாது; அது வயிற்று மொழியாகும் ; பயிற்றுமொழியாகாது.
தமிழினம் தன் முகவரியை இழந்து
கொண்டிருக்கிறது.”தாய்மொழிப் பயிற்சியில்லாதவன் தாய் நாட்டுக்குச் சேவை செய்ய முடியாது.
மொழியின்றி நாடு இல்லை. மொழிப்பற்று இல்லாதவன் நாட்டுப் பற்று இல்லாதவன் “ என்கிறார்
வெ. சாமிநாத சர்மா.
தமிழ்நாட்டில் கோவில் வழிபாடுகள் தாய்மொழியில் இல்லை.
“வேற்றவரின் வடமொழியை
வேரறுப்பீர் கோயிலிலே
மேவிடாமே.” –பாவேந்தர்.
“இன்பத் தமிழ்க் கல்வி யாவரும்
கற்றார்
என்றுரைக்கும் நிலை எய்தி விட்டால்
துன்பங்கள் நீங்கும் சுகம் வரும்
நெஞ்சினிலே
தூய்மையுண்டாகிவிடும் வீரம் வரும்”
– பாவேந்தரின் இந்தக் கனவை இந்நாட்டில்
யார் நிறைவேற்றுவார்கள்…எப்போது நிறைவேற்றுவார்கள்.? வீரம் விளைந்த இம்மண்ணில் விழுதுகளற்ற
ஆலமரமா..?
பாவேந்தரின் எண்ணங்களும்
கனவுகளும் சமுதாயத்தில் ஒரு தக்கத்தை நிகழ்த்திக்கொண்டிருக்கின்றன. இடியென எழும் தாக்கத்தின்
விளைவுகள் புரட்சிகரமான ஒரு வரலாற்றை
ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
நன்றி
வணக்கம் – மீண்டும் ஒரு தொடரில் சந்திப்போம்.
……………….தொடரும்……………………………..
”உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே.”
பாண்டியன் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியம், புறநானூறு: 183, 1- 2.
கற்பிக்கும் ஆசிரியருக்குத்
துன்பம் வந்தவிடத்து , அத்துன்பத்தைப் போக்க உதவி செய்து,
அவர்க்குப் பெரும் பொருள் கொடுத்தும் அவரைப் போற்றி வழிபட்டு,
வெறுப்பின்றிக் கல்வி கற்பது பெரிதும் நன்மை பயக்கும்.
Dr. R.KUMARAN- +91 94433
40426.
Account No: 0914101167707
IFSC CODE : CNRB0001854
MICR CODE : 613015003
TEL No: 94890 45822.
CANARA BANK, 46 E, ARULANANDA NAGAR,
NANJIKOTTAI ROAD, THANJAVUUR – 613007
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக