சான்றோர் வாய் (மை) மொழி :
192–அறிவியல் சிந்தனைகள்: இக்காலச் சிந்தனைகள்.
சர் ஐசக் நியூட்டன் – 1643 – 1727.
இவர் இங்கிலாந்து நாட்டவர் – இவர் கூறிய இயற்பியல்
அறிவியல் உண்மைகள் – தத்துவச் சிந்தனைகள் –
அறிவியல் கண்டுபிடிப்புகள் பல பெரிய மாற்றங்களை ஏற்படுத்தின.
”நான் கண்டு பிடித்தவையெல்லாம் என்முன்னோர்கள் தோளின்
மீது ஏறிநின்று கண்டவையே..!” என்றார்.
கோப்பர் நிக்கஸ், கெப்லர், கலிலியோ முதலியோர்க்கு இருந்த சமய இடையூறுகள்
இவருக்கு இல்லை. இவரின் அறிவியல் எழுச்சி சிந்தனையாளர்களை அனுபவ உலகிற்குத் தள்ளியது.
“எங்குமுள ஈர்ப்பு விசை இயக்கம் பற்றி இவர் தந்த விளக்கம் புதிய
ஆய்வுகள் தோன்றவும் ; கண்டுபிடிப்புகள் பெருகவும் உதவியது. இதனால் மக்கள் வாழ்வில்
மாற்றம் ஏற்பட்டது ; நாகரிக வளர்ச்சியும் ஏற்படலாயின.
பிரான்சிஸ் பேகன் – 1561 – 1626.
அவலம் நிறைந்த வாழ்க்கை – அரசுப்பணி – பணி இழப்பு
– பிறகு சில நூல்கள் எழுதினார் – கட்டுரை வடிவம் தோற்றுவித்தவர் இவரே.
”அறிவே ஆற்றல்” என்னும் கருத்திற்கு
முதன்மை தந்தவர். அறிவியல் துணையோடு வாழ்க்கையில் எளிமையும் இன்பமும் அடைய வேண்டும்
என்றார். உண்மைகள் இயற்கையில் பொதிந்து கிடக்கின்றன- மனத்தில் அல்ல.
அனுபவத்
துளிகளிலிருந்து அறிவியல் விதிகளை உருவாக்கும் அளவை முறைக்குத் தொகுப்பளவை என்று பெயர். பேகன் “தொகுப்பளவையின்
தந்தை” (Inductive Logic)
பகுப்பளவை,முறையே (Deductive Method) அறிவியல் ஆய்வுக்குச்
சிறந்தது என்றார். அரிஸ்டாட்டில் இக்கருத்திற்கு எதிரான தொகுப்பளைவையே சிறந்தது என்றார்.
அனுபவமும் சோதனையும் இல்லாத முறைகள் அறிவியல் ஆகா. மனத்தடைகள் (பற்று) மனிதனின் சிந்தனை
ஓட்டத்தைத் தடை செய்கின்றன.
மனத்தூய்மை சிந்தனைத் தெளிவைத் தரும். அரசியல், சமுகப் பொருளாதார ஆராய்ச்சி வளர்ச்சியில் இவரின் தொகுப்பளவை இன்றும்
துணை புரிகிறது.
What is
Science ….?
…………………..தொடரும்…………………………….
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக