தமிழமுது -2 - குடியாட்சி –
அரிஸ்டாட்டில்
“நல்ல சட்டங்களால் ஆளப்படுவதைக்காட்டிலும் ஒரு நல்ல மனிதனால் ஆளப்படுவதுதான்
ஒரு நாட்டிற்குச் சிறப்பு ; ஒரு நாட்டின் வாழ்வு தாழ்வுகளெல்லாம்
அந்த நாட்டின் இளைஞர்கள் பெறும் கல்வியைப் பொறுத்திருக்கிறது.”
ஜான்
லாக்
“பார்லிமெண்டரி முறை சனநாயகம்கூட மக்களின் போராட்டங்களால் சில நாடுகளில் முதலாளி
வர்க்கம் பெற்ற சலுகைகளாகும் .பார்லிமெண்ட் முறையில் முதலாளி
வர்க்கம் தன்னுடைய அரசியல் அதிகாரத்தை மக்கள் மீது தொடுப்பதற்கு மக்களே தேர்ந்தெடுக்கும்
பார்லிமெண்ட் என்ற சபையைப் பயன்படுத்துகிறது. சில ஆண்டுகளுக்கு
ஒருமுறை தேர்தலில் வாக்களிப்பதன் மூலம் இச்சபையின் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதோடு
மக்களுடைய உரிமை தீர்ந்து போகிறது. முதலாளித்துவ நாடுகளில் இச்சபையின்
பெயராலும் சனநாயகத்தின் பெயராலும் முதலாளி வர்க்கத்தின் உடைமைகள் பாதுகாக்கப்படுகின்றன.
அரசின் அலுவல்களில் பொதுமக்கள் பங்குகொள்ள இயலாது. சுதந்திரங்கள் எல்லாம் சொத்துடைமையாளர்களுக்கே .”
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக