தமிழமுது -15
- சங்க இலக்கியச் சுவை.
மகுளி – இழுகுபறை ஓசை. -2-
அறிஞர் பொ.வே சோமசுந்தரனார்
–உரை…..
”கடிப்பினால் உராய்தலால் உண்டாகும் மகுளியின்
ஓசை ஈண்டுக் குடிஞையின் ஓசைக்கு உவமையென்க.
கேட்போர் தம்மியல்பிற்கேற்பப் பொருள் தெரியும்படி
இசைக்கும் என்க. அஃதாவது ஆறலைக்களவர் கரந்துறையும் அந்நெறியில் பொருளொடும் போகும் வழிப்போக்கர்க்கு,
“குத்திப்புதை.,” “சுட்டுக்குவி,” என்னும் பொருள்பட இசைத்தலும் வினைவயிற் செல்வோர்க்குத்
தீ நிமித்தமாவதல் நன்னிமித்தமாகவாதல் அவர் மேற்கொண்ட வினை முற்றுமென்றாதல் முற்றாதென்றாதல்
எதிர்காலப் பொருள் தெரிய இசைத்தலும் பிறவுமாம். ஆறலைக்கள்வர்க்கஞ்சிப் போவார்தம்மச்சத்தை
இக்குரல் மிகுவித்துக் கேள்விக்கின்னாதாதல் பற்றிக் கடுங்குரல் என்றான்.”
……………….தொடரும்……………………………..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக