ஞாயிறு, 11 ஜனவரி, 2026

தமிழமுது –181– தொல்தமிழர் இசை மரபு:41. தொல்காப்பியம் : ஆய்வுரை :- கலை வளர்ச்சி:

 தமிழமுது –181– தொல்தமிழர் இசை மரபு:41. 

தமிழ் கூறும் நல்லுகத்துப் பேராசான் - தொல்காப்பியர். 

      தொல்காப்பியம் : ஆய்வுரை :- கலை ளர்ச்சி: 

       தொல்காப்பியர் காலத்திலேயே தமிழ்நாட்டில் பல கலைகளும் சிறந்து வளர்ந்திருந்தனஇக்காலத்தினர் நாடகம் , இசைநடனம் போன்றவைகளையே கலைகள் என்று கருதினர்கற்றுக்க்கொள்ளப்படு வெல்லாம்  கலைகள்நாம் அணியும் ஆடைக்குக் கலையென்றே ஒரு பெயர்ஆகவேநெசவும் ஒரு கலைமக்கள் வாழ்வுக்குத் துணை செய்யும் தொழில்கள் யாவும் கலைகள்தாம்இதுவே பண்டைய தமிழர்கள் கொள்கைஅறுபத்து நான்கு கலைகள் என்று சொல்லப்படுகின்றனஇந்த அறுபத்து நான்கு கலைகளும் அறுபத்துநான்கு தொழில்கள்இந்த அறுபத்துநான்கு தொழில்கள் இவைகள் என்பதை சுக்கிரநீதி என்னும் வடமொழி நூலிலே காணலாம்  

கூத்தும் பாட்டும் 

இசைநடனம்நாடகம இவைகளையே உயிர் வாழ்க்கைக்குரிய தொழில்களாகக் கொண்டவர்கள் தமிழ் நாட்டில் வாழ்ந்தனர்இவர்கள் இத்தொழில்களைச்

 செய்து வாழும் தனி வகுப்புனராகவே வாழ்ந்தனர். 

கூத்தர் என்பவர் ஒரு பிரிவினர்இவர்களுடைய தொழில் கூத்துகூத்தில்  குதித்தல் - கூத்துகூத்தில் இரண்டு வகை உண்டு கதை தழுவிய கூத்து ; கதை தழுவாமல் பாட்டின் பொருளுக்கேற்ப அபிநயம் பிடித்தாடும் நாட்டியம்இருவகைக் கூத்துக்களையும் நடத்திக்காட்ட வல்லவர்களே கூத்தர்கள்இன்றும் கூத்தாடி என்ற ஒரு வகுப்பினர் தமிழ் நாட்டில் இருக்கின்றனர்பல் கோயில்களிலே திருவிழாக்களின் முடிவிலே கூத்தாடுவார்கள்பல கோயில்கள் இவர்கட்குக் காணியாட்சியாக உண்டுஇவர்கள் பண்டைக் கூத்தர் வழியினராக இருக்கலாம். 

 பாணர் என்பவர் மற்றொரு பிரிவினர் பாண் - யாழ் பண்ணிலிருந்தே பாண் பிறந்ததுபண் -

 இசைபண்ணாகிய இசையைத்தரும் கருவியைப் பாண் ன்று வழங்கியிருக்கலாம்பாண் வாசிப்பதையே தொழிலாகக் கொண்டவர்கள் பாணர்கள்யாழின் மூலம் இசை விருந்தளிப்பதில் இவர்கள் வல்லவர்கள்இவர்களில் பெண்களைப் பாடினி என்று அழைப்பது வழக்கம் பாணர் வீட்டுப் பெண்கள் வாய்ப்பாட்டில் வல்லவராயிருந்தனர்இதனால்தான் ஆண்களைப் பாணர் என்றும் பெண்களைப் பாடினி என்றும் அழைத்திருக்கின்றனர் 

பொருநர் என்பவர்....... 

.........................................தொடரும்........................................ 

  

 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக