தொல்தமிழர் வழிபாடுகளும் விழாக்களும் -55.
முனைவர் இரெ. குமரன்: 3.ஐங்குறுநூறு:
தொல்தமிழரின் - வழிபாடு: பால்வரை தெய்வம் பிரித்துவிடுமோ...?
”அன்னை வாழி வேண்டு அன்னை புன்னை
பொன் நிறம் விரியும் பூக்கெழு துறைவனை
என்னை என்றும் யாமே இவ்வூர்
பிறிது ஒன்றாகக் கூறும்
ஆங்கும் ஆக்குமோ வாழிய பாலே.”
- அம்மூவனார், தாய்க்கு உரைத்த பத்து, 110.
அன்னையே ...! நீ வாழ்க, அன்னையே...! யான் சொல்வதனை விரும்பிக்கேட்பாயாக ; புன்னை மரங்கள் பொன் வண்ணம் கொண்ட மலர்களை மலரச் செய்யும் கடல் துறையினை உடைய தலைவனை யாம் எம் காதலுக்குரிய கேள்வன் எனக் கருதியுள்ளோம் ; ஆனால் இவ்வூர் மக்களோ வேறு வகையாகக் கூறுகின்றனர் ; பால்வரை தெய்வம் தலைவியை ஊரார் கருதுமாறு வேறு ஒருவர்க்கு உரியவளாகவும் செய்து விடுமோ..? அந்தப் பால் வாழ்வதாக..!
( வெவ்வேறு இடங்களில் பிறந்த தலைவனையும் தலைவியையும் ஒன்று படுத்தியது தெய்வமே ஆதலின் அங்ஙனம் கூட்டிய அத்தெவமே அவர்களைப் பிரித்துவிடுதலும் கூடுமோ..? எனத் தோழி வியப்புடன் கேட்டாள்.)
( என்னை - என் + ஐ, என் தலைவன். ; இவ்வூர் - மக்கள்் (ஆகுபெயர். : ஆங்கும் -அவ்வாறும். ; பால் - ஊழ் , விதி.)
...............................தொடரும்.......................................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக