தன்னேரிலாத தமிழ் -267.
56.கொடுங்கோன்மை
551
கொலைமேற்கொண்
டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும்
வேந்து.
குடிமக்களின்
அமைதியை அழித்து,
அலைக்கழித்து
வருத்தும்
முறையற்ற
செயல்களைச்
செய்யும்
கொடுங்கோல்
மன்னன்,
கொலை செய்வதையே
தொழிலாகக்கொண்ட
ஒரு கொலைஞனைவிடக்
கொடியவன்
ஆவான்.
” கொடுங்கோல் வேந்தன் குடிகள் போலப்
படுகதிர் அமையம் பார்த்திருந்தோர்.”
–
சிலப்பதிகாரம், 13.
கொடுங்கோல் வேந்தன்
ஆட்சியின் கீழ்
வாழும் குடிமக்கள்,
அவன் செத்து
ஒழிவதை ஆவலுடன்
எதிர்பார்ப்பதைப் போல.
வெம்மையான கதிரவன்
மறையும் பொழுதை
அவர்கள் ( கோவலன். கண்ணகி. கவுந்தி அடிகள்) ஆவலுடன் எதிர்நோக்கியிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக