தாய்மொழி வழிக் கல்வி-11
ஆங்கிலக் கல்வியின்
வாயிலாக மிகப் பெரும்பான்மை மக்களிடமிருந்து கல்வி விலகியே இருக்கிறது. கல்விப் புரட்சி
உண்டாக்க வேண்டிய காலக் கட்டத்தில் எழுத்தறிவு இயக்கம் நடத்துவது ஏமாற்று வேலையே. ’எல்லோருக்கும்
கல்வி’ என்ற கொள்கை நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமானால் அக்கல்வி எம்மொழி வழியாகத் தரப்பட
வேண்டும் எனச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
“ தாய்மொழியின் மீதுள்ள
பற்றின் காரணமாகத் தாய்மொழிக் கல்வியை நாங்கள் வற்புறுத்தவில்லை. சமுதாயத்தின் எல்லா
நிலை மக்களுக்கும் கல்வியும் உயர்கல்வியும் கிடைக்க வேண்டும். ஏழை எளிய மக்களுக்கு
உயர்கல்வி எட்டாக்கனியாக இருப்பதற்கு முழுமுதல் காரணம் ஆங்கிலவழிக் கல்வியே.” –டாக்டர்
தமிழண்ணல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக