தாய்மொழி வழிக்
கல்வி-16.
மணவர்கள் மனம் கொள்ளத்தக்க
வகையில் சொல்லும் வழி தாய்மொழியால்தான் இயலும்.ஈண்டு
இரண்டு வரலாற்று உண்மைகளைச் சுட்டுவம்.
“1847 இல் டாக்டர்
சாமுவேல்பிஷ்கிரீன் (1822- 1884) என்ற ஆங்கில
மருத்துவர் இலங்கை வந்தார். ஆங்கில மருத்துவப் பணியில் ஈடுபட்டிருந்த அவர் இலங்கை வாழ்
தமிழர் 33 பேருக்குத் தாய்மொழியாகிய தமிழ்வழி ஆங்கில மருத்துவத்தைக் கற்பித்தார். மேலும்
மாணவர்களுக்குத் தேவையான மருத்துவ நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தார். இவரால் மொழிபெயர்க்கப்பட்ட
நூல்கள்.
1) இரண வைத்தியம் (Surgery
– 1867)
2) வைத்தியதாகரம்
(மருத்துவக் கையேடு) (Physicians Vade mecum- 1872)
3 )மனுஷவங்காதி பாதம்
(Human Anatomy- 1872)
4) வைத்தியம் (
Practice of Medicine – 1875)
5) மனுஷசுகரணம்
(Human Physiology - )
6) கெமிஸ்தம் (
Chemistry – 1875)
7) இந்து பதார்த்த
சாரம் ( Wanings Pharmacopoeia of India – 1884)
இன்றைக்கு 175 ஆண்டுகளுக்கு
முன்னரே தனி ஒரு மனிதன் அதுவும் ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்ட ஒருவரால் தமிழில்
மருத்துவக் கல்வி அளிக்க முடிந்தது. இன்றோ மருத்துவம் பொறியியல் முதலிய அறிவியல் பாடங்களைத்
தமிழில் கற்பிக்க முடியுமா? என்று கேட்பது முறையோ…?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக