திங்கள், 5 ஜூன், 2023

தாய்மொழி வழிக் கல்வி

 

தாய்மொழி வழிக் கல்வி

 

மொழி என்பது மனிதகுல மெய்யறிவின் பொக்கிசங்களைப் பாதுகாத்து மரபுவழியாக அளித்துச் செழுமைப்படுத்த வல்ல மதிப்புமிக்க சாதனமாகும்” –மாமேதை வி.. லெனின்.

 

                   மனிதன் சிந்திக்கத் தெரிந்தவன், சிந்திக்கும் திறன் தாய்மொழி வழியேதான் நிகழ்கிறது. எனவேதான் தாய்மொழி வழிக் கல்வி பெற வேண்டுவது இனியமையாததாகின்றது.

 

தாய்மொழி வழிக் கல்வி கற்பது மக்களின் உரிமை; அதற்கு ஆவன செய்ய வேண்டியது அரசின் கடமை. சமுக, பொருளாதார விடுதலையின்றி வெறும் அரசியல் விடுதலை மட்டுமே சுதந்திரமாகாது. அடிமை விலங்கொடித்து விடுதலை பெற்ற நாடுகள் பலவும் கல்விப் புரட்சியின் வழியே சமுக, பொருளாதார மாற்றங்களக் கண்டு முன்னேறியுள்ளன. விடுதலை அடைந்த பின்பு  புதிய சமுதாயத்தைத் தோற்றுவிக்க முனைந்த தலைவர்கள் தாய்மொழிக் கல்வி வாயிலாக அச்சாதனையை நிகழ்த்திக் காட்டியுள்ளனர். சிந்தனைக்கும் செயல்பாட்டிற்கும் உதவாத வெறும் ஏட்டுக்கல்வியைப் புறந்தள்ளிவிட்டுத் தாய்மொழிக் கல்வியால் புதிய சமுதாயத்தை உருவாக்கினர்.

 

முதல் மற்றும் இரண்டாவது உலகப் பெரும் போருக்குப்பின் பல நாடுகளில் ஆங்கிலேயர் வெளியேற்றப்பட்டனர்; ஆங்கிலமும் வெளியேற்றப்பட்டது. விடுதலை அடைந்த நாடுகள் பலவும் இச்சாதனையைச் செய்து முடித்துள்ளன.

இந்தியா இன்னும் ஆங்கில ஆதிக்கத்தின் பிடியிலிருந்து விடுபடவில்லை.

தேசியக்கல்விக் கொள்ளகையில் தெளிவும் தீர்வும் கிடையாது.1835 இல் மெக்காலே வகுத்தளித்த ஆங்கிலக் கல்வித் திட்டம்தான்இன்றும் நடைமுறையில் இருந்துவருகிறது. இக்கல்வித் திட்டத்தின் வழி இன்றும்கருப்புத் தோல் போர்த்திய வெள்ளையர்கள்  உருவாகிக் கொண்டிருக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக