தாய்மொழி வழிக் கல்வி –12.
வளர்ந்துவரும் அறிவியல்
வளர்ச்சிக்கேற்ப நம்
மொழியை வளர்த்தாக
வேண்டும். இது கணிப்பொறி யுகம்,
கணிப்பொறியியலிலும் தமிழ்மொழி
வளர்ச்சியடைந்து வருகிறது.
கணிப்பொறிக்குரிய மொழியாகத்
தமிழ் ஏற்றம்
பெற்ற பிறகு
தாய்மொழிவழிக் கல்வி
நூற்றுக்கு நூறு
விழுக்காடு சாத்தியமே.
“அறிவியல் தமிழ்
வளர்ச்சிக்கு எல்லாவகையிலும் ஆக்கம் தேடும் வகையில்
மேற்கில் வெளியாகும்
அறிவியல் நுட்பச்
செய்திகளை உடனுக்குடன்
தமிழில் தரும்
அரிய வாய்ப்பைக்
கூரியர் இதழ்மூலம்
யுனெஸ்கோ ஏற்படுத்தித்
தந்துள்ளது , எத்தகைய
அறிவியல் நுட்பக்
கருத்தாயினும் சொற்செட்டோடும் பொருட் செறிவோடும் தமிழில்
கூற முடிவதற்கு
யாருடைய திறமையும்
காரணமல்ல எண்ணற்ற
வேர்ச் சொற்களைக்
கொண்ட தமிழ்மொழி
இயல்பாகவே அறிவியல்
மொழியாக அமைந்திருப்பதுதான்”
என்கிறார் அறிஞர்
மணவை முஸ்தபா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக