தாய்மொழி வழிக் கல்வி –11.
தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் பொறியியல் கல்வியைத் தமிழில் கற்பிக்க முடியுமா..? என்பதுபற்றித் துணைவேந்தர்(1981 –
1986) வ.ஐ. சுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. அக்கருத்தரங்கில் பேசிய மின்துறைப் பொறியாளர் பேராசிரியர் இரா. கணேசன்…….
“
பொறியியல் கல்வியைத் தமிழில் நடத்த முடியும்; இப்போதே நடத்த முடியும். பொறியியல் துறையில் ஏராளமான நூல்கள் வெளிவந்துவிட்டன. தமிழில் எழுதப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பொறியியல் துறைப் பாட நூல்கள் இன்னும் அச்சிடப்படாமல் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்தில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றைக் கரையான்கள் தின்று கொண்டிருக்கின்றன. அவற்றை உடனே வெளியிட ஆவன செய்ய வேண்டும். பாட நூல்கள் வெளிவரும்வரையில் நாம் காத்திருக்கத் தேவையில்லை. வரும் கல்வி ஆண்டிலேயே நம் தமிழ்ப் பல்கலைக் கழகத்திலேயே பொறியியல் வகுப்புகளைத் தொடங்கலாம். திருச்சியில் உள்ள மண்டலப் பொறியியல் கல்லூரியில் ஆய்வுகளைச் (Experiments) செய்து கொள்ளலாம்.” என்று கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக