சனி, 10 ஜூன், 2023

தாய்மொழி வழிக் கல்வி –6

 

தாய்மொழி வழிக் கல்வி –6

சுவாமி விவேகானந்தர் (1863 – 1902)

 கல்வி மனிதனுக்குள்ளே அடங்கிக்கிடக்கும் பூரணத்துவத்தை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்பது விவேகானந்தரின் கருத்து. “ மூளையில் பல விஷயங்களைத் திணித்தல் கல்வியாகாது. கற்கும் கருத்துகள் உள்ளத்தோடொன்றி அதன் மயமாகிப் புத்துயிரூட்டி மனிதத் தன்மையை மலரச் செய்து ஒழுக்கத்தைத் திருத்தி அமைப்பனவாய் இருத்தல் வேண்டும். அதாவது கசடறக் கற்றலும் கற்றபின் அதற்குத்தக நிற்றலும் வேண்டும். இதுவே போதனா முறையின் இலட்சியமாதல் வேண்டும். கல்வி கற்பிக்கும் ஆசிரியரும் கற்கும் மாணவரும் கல்விச்சாலைகளும் இந்த இலட்சியத்திற்கு ஏற்றவாறு அமைதல் வேண்டும். ஊரெங்கும் நாடெங்கும் ஆண்களும் பெண்களும் கல்வியறிவு பெற்று உலக வாழ்க்கையை வளம்பெற நடத்தும் ஆற்றல்பெற வேண்டும். குருகுல முறையிலே தாய்மொழி வாயிலாக உலகியற் கல்வியையும் ஞான வாழ்விற்குரிய கல்வியையும் ஒருங்கே போதித்தல் வேண்டும்.” என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக