தமிழமுது –183– தொல்தமிழர் இசை மரபு:43.
தமிழ் கூறும் நல்லுகத்துப் பேராசான் - தொல்காப்பியர்.
தொல்காப்பியம் : ஆய்வுரை :- கலை வளர்ச்சி:
நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் (தொல்.பொ. அக.56.)
நாடக வழக்கம் என்பது புனைந்துரைக் கதையை நாடகமாக நடத்துவது. இல்லாதவனைத் தலைவனாக - அதாவது கதைநாயகனாக வைத்து - மக்கள் வாழ்க்கையைச் சித்திரிக்கும் பல நிகழ்ச்சிகளைச் சேர்த்து எழுதி நடிக்கப்படுவதே நாடகமாகும். உலகியல் வழக்கம் - உலகிலே நடைபெறும் உண்மை நிகழ்ச்சிகளைக்கூறுவது.
ாடக நாடக வழக்கத்தைப் பின்பற்றிப் பாடல்கள் பாடுவதும், உலகியல் வழக்கத்தை அமைத்துப் பாடல்கள் பாடுவதும் பண்டைத் தமிழர்கள் வழக்கம்.
இசைக் கருவிகள்:
இசைக்குரிய கருவிகளைத் தோற்கருவி, துளைக் கருவி, நரம்புக்கருவி, கஞ்சக்கருவி என்று நால்வகையாகக் கூறுவர். பறை, முழவு, முரசு, தண்ணுமை போன்றவைகள் தோலால் செய்யப்படும் கருவிகள். குழல் போன்றவைகள் துளையிட்டுச் செய்யப்படும் கருவிகள். யாழ் போன்றவைகள் நரம்புகளால் நாதம் எழுப்பப்படும் கருவிகள். தாளம் போடுவதற்குச் செய்யப்படும் ஜாலரா - கஞ்சக் கருவி.
இத்தகைய கருவிகளைச் செய்யும் கலையும் இசைக்கலையிலே வல்லவர்களானவர் தமிழர்களிடம் இருந்திருக்க வேண்டும். ஓவியம் முதலிய கலைகளிலும் தமிழர்கள் உயர்ந்திருந்தனர். ஆகவே, தொல்காபியர் காலத்தில் தமிழர்கள் பல கலைகளிலும் பாண்டித்தியம் பெற்றிருந்தனர் என்பதில் ஐயமில்லை. ”
(சாமி. சிதம்பரனார். தொல்காப்பியத் தமிழர்,2002.)
தொல்காப்பியர் கூறும் பாட்டு: பாட்டு என்பதற்கு அடியின் சிறப்பே முதன்மை என்கிறார். “அடியின் சிறப்பே பாட்டெனப் படுமே “ 1292.
பண்ணத்தி: “ பாட்டிடைக் கலந்த பொருளவாகிப் பாட்டின் இயல் பண்ணத்தி இயல்பே.” -1436. அஃதாவது பாட்டிடைக் கலந்த பொருளை யுடையனவாய். சிற்றிசையும் பேரிசையும் ஆகி இசைத்தமிழில் கூறப்பெறுவன பண்ணத்தியின் இயல்பு.என்பார். பண்ணத்தி 2*6 - ஆகப் பன்னிரண்டு அடிகளை உடையதாக வரும்; அதைவிட மிக்க அடிகளைப் பெற்று வந்தாலும் தவறில்லை என்றாராக.
.........................................தொடரும்........................................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக