புதன், 16 நவம்பர், 2011

சங்க இலக்கியச் செய்திகள் -

கணவனும் மனைவியும்....
அன்பும் மடனும் சாயுலும் இயல்பும்
என்பும் நெகிழ்க்கும் கிளவியும் பிறவும்
ஒன்றுபடு கொள்கையொடு ஓராங்கு முயங்கி
இன்றே இவணம் ஆகி ...  ..
                      -எயினந்தை மகனார் இளங்கீரனார்,அகம்.225: 1-4
அன்பும் மடனும் மென்மையும் ஒழுக்கமும் உயிரை மகிழ்விக்கும் இனிய சொல்லும்  ஒன்றுபட்டுள்ள கொள்கையும் பிறவும் ஒரே தன்மை உடையதாய் என்றும் இருக்க இவ்விடத்தே இருந்தோம். 
அன்பு- ஒருவரையொருவர் இன்றியமையாமைக்கேதுவாகிய காதல்.
மடன் - ஒருவர் குற்றம் ஒருவர் அறியாமை.
சாயல் - மென்மைத் தன்மை
இயல்பு - ஒழுக்கம்
பிற என்றது செறிவு, நிறை, அறிவு முதலாயினவற்றை. ஒன்றுபடு கொள்கை என்றமையால் இவையெல்லாம் தலைவனுக்கும் தலைவிக்கும் ஒத்திருத்தல் வேண்டும் என்றவாறாயிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக